டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அதற்கு இணையான தரத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பெரும்பாலான மாடல்கள் பிஎஸ்6 தரத்தில் வந்துவிட்டன.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

டிவிஎஸ் ஜுபிடர், ஸ்கூட்டி பெப் ப்ளஸ், என்டார்க் 125 ஸ்கூட்டர்கள் பிஎஸ6 தரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோன்று, எக்ஸ்எல்100 மொபட், ஸ்டார் சிட்டி ப்ளஸ், ஸ்போர்ட், ரேடியான், அப்பாச்சி பைக்குகளும் பிஎஸ்6 தர எஞ்சினுடன் சந்தைக்கு வந்துவிட்டன.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில், பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மிக முக்கிய மாடலாக இருந்து வரும் டிவிஎஸ் விக்டர் 110 பைக்கும் விரைவில் பிஎஸ்6 தரத்தில் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது பட்ஜெட் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

இதுதொடர்பான டிவிஎஸ் ஆவணம் ஒன்றில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான விக்டர் 110 மற்றும் ஸெஸ்ட் 110 ஸ்கூட்டர் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இவை விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

இதில், டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடலில் இருக்கும் 109.7 சிசி எஞ்சின் 9.6 பிஎஸ் பவரையும், 9.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் தற்போது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்லது. இந்த மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

மேலும், டிவிஎஸ் விக்டர் 110 பைக்கில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹசார்டு விளக்குகளை ஒளிரவிடும் வசதி, வசதியான இருக்கை அமைப்பு, அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்!

டிவிஎஸ் விக்டர் பிஎஸ்4 மாடலானது ரூ.54,042 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பிஎஸ்6 எஞ்சினுடன் வரும் விக்டர் 110 மாடலானது சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Chennai based two wheeler maker, TVS Motor company has confirmed the launch of the Victor BS6 model in Indian market very soon.
Story first published: Monday, May 18, 2020, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X