டயருக்கு பதில் இரும்பு டிரம்! பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

பிரபல யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலுக்கு பதிலாக இரும்பு டிரம்பை பொருத்தியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

இணையத்தில் பல வித்தியாசமான வீடியோக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஒரு சில வீடியோ மட்டுமே மக்கள் மனதில் ஆழ்ந்த இடத்தைப் பிடித்து, வைரலாகின்றன. அம்மாதிரியான ஓர் வீடியோவைப் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இளைஞர் ஒருவர் தனது பைக்கில் வீலுக்கு பதிலாக டிரம்மைப் பயன்படுத்தியதைப் பற்றிய தகவல்தான் அது.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

யுட்யூப்பில் ஃபேமஸாவதற்கும், கணிசமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் சிலர் வித்தியாசமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையிலேயே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிரேஸி எக்ஸ்ஒய்இசட் எனும் யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலுக்கு பதிலாக இரும்பு டிரம்மைப் பயன்படுத்தி ஓட்டியிருக்கின்றனர்.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

இதற்காக அவர்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் விக்டர் பைக்கைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த பைக்கின் முன் வீல் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரும்பு டிரம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கின்றது. வீலுடன் சேர்த்து டிஸ்க் பிரேக்கும் நீக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

ஒட்டுமொத்தமாக வீலுக்கு பதிலாக டிரம்மை அந்த இடத்தில் பொருத்தும் விதமாக இளைஞர்கள் குறிப்பிட்ட சில அம்சங்களையும் பைக்கில் இருந்து நீக்கியிருக்கின்றனர். தொடர்ந்து, பைக்கின் முன்பக்கத்தில்ட பொருத்துவதற்காக டிரம்மிலும் சில மாற்றங்களை அவர் செய்திருக்கின்றனர்.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

அதாவது, சாலையில் சீராக செல்வதற்கு ஏதுவாக இரும்பு பைப் மற்றும் சட்டங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், டிரம் உருளுவதற்கு ஏதுவாக அதில் பேரிங்கும் (Bearing) சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் பின்னரே பைக்கின் முன் பக்க ஃபோர்க்கில் டிரம் வீல் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

இந்த அமைப்பு பைக்கிற்கு மினி ரோட் ரோலர் போன்ற உருவத்தை வழங்கியிருக்கின்றது. அது சாலையில் செல்லும்போது அத்தகைய சப்தத்தையே எழுப்பிய வண்ணம் பயணிக்கிறது. ஆரம்பத்தில் டிரம் பொருத்திய பைக்கை இயக்கும்போது, ஓட்டுநர் அதிக சிரமத்தை உணர்வதைப் போன்று தனது முகப் பாவனையை வெளிப்படுத்தினார்.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த கியரைப் போட்டு பைக்கை ஸ்மூத்தாக இயக்க ஆரம்பிக்கின்றார். மேலும், தார் சாலையில் மட்டுமின்றி காலியாக இருந்த வயல்வெளியிலும் அந்த பைக்கை யுட்யூபர் இயக்குவதை நம்மால் காண முடுகின்றது. ஆனால், மண் உதிரியாக இருந்ததால் அவரால் பைக்கை சீராக இயக்க முடியவில்லை.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

மேலும் பைக் முன்னேறச் சிரமப்படுவதையும் நம்மால் காண முடிகின்றது. மிகப்பெரிய உருளையை பைக்கில் பொருத்தியதால் அதன் இயக்கம் சீல் குலைந்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இது, பைக்கின் கன்ட்ரோலை சிதைப்பது மட்டுமில்லாமல் வாகனத்தின் இழுவைத் திறனையும் பாதிக்கச் செய்கின்றது.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

அதேசமயம், குறிப்பிட்ட பொஷிஷனில் நிறுத்திய பின்னர் சைடு மற்றும் சென்டர் ஸ்டாண்டு இல்லாமலேயே பைக் நிற்பதற்கு அந்த டிரம் உறுதுணையாக இருக்கின்றது. இதற்கு இரும்பு டிரம்மின் நீளமான உருவ அமைப்பே முக்கிய காரணமாக இருக்கின்றது.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

யுட்யூபரின் இந்த முயற்சி முற்றிலும் ஆபத்தானதாகும். ஆம், முன் பக்க வீலுக்கான பிரேக்குகள் நீக்கப்பட்டிருப்பதால் அவர் வெறும் பின் பக்க வீலை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் நிலவுகின்றது. இம்மாதிரியான நிலை யுட்யூபருக்கு மட்டுமின்றி எதிர்புறத்தில் வரும் வாகன ஓட்டிக்கும் தீங்கை விளைவிக்கும். எனவேதான் பொதுவெளியில் இம்மாதிரியான ஸ்டண்டுகளை செய்யக்கூடாது என போக்குவரத்து விதிகள் உறுதியாக கூறுகின்றன.

டயருக்கு பதில் இரும்பு டிரம்... பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்!! முடிவில் என்னவாச்சு தெரியுமா?

இருப்பினும், லைக்ஸ், புகழ்ச்சி மற்றும் வருமானம் ஆகியவற்றிற்காக இளைஞர்கள் சிலர் முற்றிலும் விநோதமான மற்றும் ஆபத்தான செயல்களை வாகனம் சார்ந்து அரங்கேற்றி வருகின்றனர். தற்போது வீடியோவை வெளியிட்டிருக்கும் இதே இளைஞர்கள் பல்வேறு விதிமீறல் வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றனர்.

மோட்டார்சைக்கிள்மீது ரோட் ரோலரை விட்டு ஏற்றி இறக்குதல், கிரேனை வைத்து காரை அழித்தல் போன்று பல வீடியோக்களை அவர்கள் தயார் செய்து வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது.

Most Read Articles
English summary
TVS Victor Modified Into Road Roller. Read In Tamil.
Story first published: Monday, September 21, 2020, 15:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X