டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

சென்னையில் டிவிஎஸ் நிறுவனம் நடத்திய ஆட்டோமொபைல் துறை இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் புரோமித் கோஷ் அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மோட்டார் பந்தயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், இளம் பைக் பந்தய வீரர்களை அடையாளும் விதமாக பல்வேறு போட்டிகளையும் நடத்தி வருகிறது.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

அந்த வகையில், ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு பைக் பந்தயத்தையும் நடத்தி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த சிறப்பு பைக் பந்தயத்தை டிவிஎஸ் நடத்தி வருகிறது.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை எம்எம்ஆர்டி மோட்டார் பந்தயக் களத்தில் நடந்தது. இதில், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் எமது ரிவியூ எடிட்டர் புரோமித் கோஷ் பங்கு கொண்டார்.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

இந்தியாவின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளை சேர்ந்த 14 இளம் பத்திரிக்கையாளர்கள் இந்த பைக் பந்தயத்தில் கலந்து கொண்டனர். பந்தயத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்தும் அம்சங்கள் கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி பைக்குகள் வழங்கப்பட்டன.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

இந்த பைக்குகள் மிகவும் இலகுவான எடையுடன் அதி செயல்திறன் மிக்கதாகவும் இருந்தன. முதல்கட்டமாக பந்தயத்தில் கலந்துகொண்டவர்களுக்கு டிவிஎஸ் அணியை சேர்ந்த பயிற்றுனர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

இதைதொடர்ந்து பயிற்சிப் போட்டியும், அதனைத் தொடர்ந்து தகுதிச் சுற்றுப் போட்டியும் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் பங்கேற்ற புரோமித் கோஷ் 5-ம் இடம் பிடித்தார்.

டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி!

மேலும், இந்த பந்தயத்தின் தகுதிச் சுற்றில் 2.29.31 என்ற நேரத்தில் பந்தய களத்தை கடந்து அடுத்த சுற்றுக்கும் தகுதிப் பெற்றார். அடுத்த போட்டி வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சென்னை எம்எம்ஆர்டி பந்தய களத்தில் நடக்க இருக்கிறது.

Most Read Articles

English summary
TVS organises its Young Media Racer Program once in a year. This program started back in 2017 and this is their fourth season. Journalists from various publications and from all over the country are called to race against each other on the race-spec TVS Apache RTR 200 4V.After the entire qualifying session was over we got our positions and we are happy to announce that DriveSpark got P5 (with a lap time of 2.29.31) and qualified to go-ahead for the next race.
Story first published: Monday, November 23, 2020, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X