காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ!

பல்கலை மாணவர்கள் தனியார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பலூன் ரக மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

உலகில் நாள்தோறும் நூற்றுக் கணக்கில் புதுமுக மின் வாகனங்களின் அறிமுகம் அரங்கேறி வருகின்றது. உலகம் முழுவதிலும் மின்வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணத்தால் இந்த நிலை உருவாகியுள்ளது. இந்தியாவிலும்கூட கணிசமான புது முக மின் வாகனங்களின் அறிமுகம் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றது.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத சிறப்பு வடிவமைப்புடன் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை பல்கலைக் கழக மாணவர்கள் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை டோக்யோ பல்கலைக் கழக மாணவர்கள் அறிமுகம் செய்திருக்கின்றனர். புதுமையான கருத்துகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள். இதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது வெளிவந்திருக்கும் மின்சார வாகனம் பற்றிய தகவல் உள்ளது.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

இது காற்றடைக்கப்பட்ட பலூன் போன்ற அமைப்புடைய வாகனம் ஆகும். இதன் டயர் முதல் இருக்கை வரை அனைத்துமே காற்றடைக்கப்பட்ட பைகள் மட்டுமே ஆகும். இதிலேயே மின்சார ஸ்கூட்டர் திறன் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவை என்றால் காற்றை நிரப்பி மின்சார ஸ்கூட்டராகவும், தேவையில்லை என்றால் அதில் இருக்கும் காற்றை வெளியேற்றி விட்டு நம்முடைய பேக்கிற்குள் அடக்கிவைத்துக் கொள்ளவும் முடியும்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மின்சார வாகனத்தை டோக்கியோ பல்கலைக் கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை முன்மாதிரி மாடலாகவே தற்போது அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். ஏற்கனவே, சூட்கேஸ் வடிவத்தில் மின்சார வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தநிலையில் தற்போது ஸ்கூட்டர் வடிவத்தில் இதனை அறிமுகம் செய்திருக்கின்றனர்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

விரைவில் இதே காற்று நிரப்பும் பை ரகத்தில் மின்சார பைக், நகரும் வீல் சேர் வடிவிலான மின்சார வாகனம் என பன்முக வாகனங்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போர்டபிள் மற்றும் இன்ஃபிளேடபிள் மொபிலிட்டி (poimo - "POrtable and Inflatable MObility") எனும் திட்டத்தின் அடிப்படையில் இந்த விநோதமான மின்சார வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய மற்றும் ஊதப்பட்ட வாகனம் என்பது பொருள் ஆகும்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

இதனடிப்படையில் பன்முக பயனளிக்கக்கூடிய வாகனங்களை உருவாக்க டோக்யோ பல்கலைக் கழக மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் முன்னோட்டமாகவே முதலில் சூட்கேஸ் வடிவிலான மின்சார வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தற்போது மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான பாகங்கள் காற்று வெளியேற்றப்பட்ட பின்னர் கைக்குள் அடங்கும் பைகளைப் போன்று காட்சியளிக்கின்றது.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

எனவே காற்றிறக்கம் செய்யப்பட்ட பின்னர் அதனை எளிதில் ஓர் கேரி பேக்கிலோ அல்லது பேக்-பேக்கிலேயோ எடுத்துச் செல்ல முடியும். ஆகையால், இந்த வாகனத்தைப் பார்க் செய்ய தனியிடம் தேவைப்படாது. மேலும், நம் கூடவே வாகனத்தை எடுத்துச் செல்வதால் திருட்டு பயமும் இருக்காது. இத்துடன், எப்போதும் நம் கைகளிலேயே வாகனம் இருப்பதால் எப்போது தேவைப்பட்டாலும் காற்றை நிரப்பி அதனை வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

டோக்கியோ பல்கலைக் கழக மாணவர்கள் இதனை மற்றுமொரு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்தே வடிவமைத்துள்ளனர். ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மெர்கரி (Mercari R4D) என்ற நிறுவனமே மாணவர்களுக்கு இந்த விநோதமான மின் வாகனத்தை உருவாக்கும் பணியில் உதவியளித்திருக்கின்றது. இந்த கூட்டணியே எதிர்காலத்தில் மிக மிக விலைக்குறைந்த மற்றும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய மின் வாகனங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மின் வாகனம் எளிதில் கையாளக்கூடிய மட்டுமில்லைங்க, மிக மிக எடைக்குறைந்ததும்கூட. மேலும், இதில் பயணிக்கும் மிக சௌகரியமான உணர்வை நம்மால் பெற முடியும். இது காற்றடைக்கப்பட்ட பலூன் என்பதால் மிகவும் மிருதுவமான இருக்கை உணர்வைப் பெற முடியும். எனவேதான், இதில் பயணிப்பது அலாதியான உணர்வை வழங்கும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

இந்த மின்சார வாகனம் எப்படி இயங்கும் என்பதை விளக்கும் விதமான வீடியோவை இஆர்ஏடிஓ கவஹரா யுஐஎன் புராஜெக்ட் (ERATO Kawahara UIN Project) எனும் யுட்யூப் சேனல் வாயிலாக டோக்யோ பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். தொடர்ந்து முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட சூட் கேஸ் வடிவிலான மின்சார வாகனம் பற்றிய வீடியோவையும் வழங்கியுள்ளோம். அதையும் நீங்கள் காணலாம்.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

நாம் பார்த்த அனைத்து மின்சார வாகனங்களும் காற்று நிரப்பட்ட பலூன் ரக வாகனங்கள் என்பதால் இவற்றை உடனக்குடன் தேவைக்கேற்ப அளவிலும் பெற முடியும். இதுபோன்ற எண்ணற்ற வசதிகளுடன் விரைவில் இந்த விநோதமான மின்சார வாகனங்கள் உலகில் காட்சிக்கு வருவிருக்கின்றன. முன்னதாக வரும் வாரம் அமெரிக்காவில் நிகழவிருக்கும் யுஐஎஸ்டி 2020 ஆன்லைன் மாநாட்டில் இந்த வாகனத்தின் முன்மாதிரி மாடல்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ பாத்த மெர்சலாயிடுவீங்க!

டோக்யோ மாணவர்களின் இந்த விநோதமான மின்சார வாகனத்திற்கு எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் மத்தியில் நற் மதிப்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. மேலும், எப்போது இந்த மாதிரியான வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்ற எண்ணத்தையும் தூண்டச் செய்துள்ளது. ஆனால், உற்பத்தி மற்றும் விற்பனைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
University of Tokyo Students Develops Portable & Inflatable E Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X