விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

2021 கேடிஎம் ட்யூக் 125 பைக் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பான ஸ்பை வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

இந்தியாவில் மலிவான கேடிஎம் பைக் மாடலாக விளங்கிவரும் கேடிஎம் 125 ட்யூக் முதன்முதலாக 2018ல் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த 125சிசி பைக்கின் 2021 வெர்சனை விற்பனைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

இந்த நிலையில்தான் தற்போது 2021 கேடிஎம் 125 ட்யூக் பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைந்துள்ளன. எம்ஆர்டி வி.லாக்ஸ் என்ற யூடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோவில் ஒவ்வொரு 2021 ட்யூக் 125 பைக்கும் ஒவ்வொரு விதமான நிறங்களில் காட்சியளிக்கிறது.

Image Courtesy: MRD Vlogs

இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நிறத்தேர்வுகள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பெயிண்ட் மட்டுமின்றி, ஹெட்லைட்டின் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது முன்பை காட்டிலும் கூர்மையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

ஹெட்லைட் உடன் பெட்ரோல் டேங்க், டேங்க் நீட்டிப்புகள் மற்றும் பின்பக்க வால்பகுதியின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 2021 கேடிஎம் 125 ட்யூக் பைக் கேடிஎம் நிறுவனத்தின் புதிய டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே டிசைன் மொழியில் தான் 200 ட்யூக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

இதனால் தோற்றத்தில் இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அதேபோல் 200 ட்யூக்கின் எல்சிடி திரை 2021 125 ட்யூக் பைக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியான டிசைன் உடன் அப்டேட் செய்யப்பட்ட 125 ட்யூக்கின் சேசிஸ்-உம் அப்கிரேடை பெற்றுள்ளது.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

இந்த 2021 மாடல் ஒருங்கிணைக்கப்பட்ட போல்ட்-ஆன் சப் ஃப்ரேம் உடன் 200 ட்யூக்கின் இரும்பு ட்ரெல்லிஸ் ஃப்ரேம்-ஐ பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு சுமார் 2.4 லிட்டர் அதிகரிப்பட்டு 13.4 லிட்டரில் வழங்கப்படவுள்ளது. இதன் காரணமாக பைக்கின் எடை 7- 10 கிலோ அதிகரித்திருக்கலாம்.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

மற்றப்படி வழக்கமாக வழங்கப்படும் 124.71சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதிகப்பட்சமாக 15 எச்பி மற்றும் 12 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்படும் தற்போதைய கேடிஎம் 125 ட்யூக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.42 லட்சமாக உள்ளது. இதன் 2021 வெர்சனின் விலை இதனை காட்டிலும் ரூ.6 ஆயிரம் வரையில் அதிக விலையில் விற்பனைக்கு வரலாம்.

விற்பனைக்கு தயாராக இருக்கும் 2021 கேடிஎம் ட்யூக் 125 பைக்!! ஷோரூமில் கண்ணை கவரும் தோற்றத்தில்...

2021 கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தற்போது ஷோரூம்களையும் இந்த பைக் சென்றடைய துவங்கிவிட்டதால் இதன் அறிமுகம் இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2021 KTM Duke 125 Arrives At Dealer Showroom – Price Rs 6k More
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X