ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

கொடிய விஷமுள்ள பாம்பு ஹெல்மெட்டில் இருப்பதை உணராமல் இளைஞர் ஒருவர் அணிந்து சென்றுள்ளார். சுமார் 11 கிமீ சுற்றிய அந்த வாலிபருக்கு நடந்தது என்னவென்பதை இந்த பதிவில் காணலாம்.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

இருசக்கர வாகனங்களை இயக்கும்போது வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என்ற விதி நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கின்றது. வாகனத்தை இயக்குபவர்கள் மட்டுமில்லாமல் உடன் பயணிப்பவரும் நிச்சயம் ஹெல்மட் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பெயரளவில்கூட மதிப்பதில்லை.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

இருசக்கர வாகனத்தில் பயணக்கும்போது பயணிகளுக்கு குறைந்த அளவே பாதுகாப்பு நிலவுகின்றது. இது, விபத்து நேரங்களில் அவர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. பல நேரங்களில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் கூட ஏற்படுகின்றன. அதில் பெரும்பலானோர் தலையில் காயமுற்ற காரணத்தினாலேயே பரிதாபமாக இறக்கின்றனர்.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

ஆகையால், இதை தவிர்க்கும் விதமாக ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு ஓர் இளைஞருக்கு இந்த ஹெல்மெட்டே மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் அணிந்துச் சென்ற ஹெல்மெட்டில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று இருந்ததாகக் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இதுகுறித்த தகவலை மலையாள நாளிதழ் தளமான மாத்ருபூமி உறுதி செய்துள்ளது.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

பொதுவாக பாம்புகள் மிதமான வெப்பம் நிலவும் இடத்தையே விரும்புகின்றன. இதனாலயே, மலையிடுக்கும் மற்றும் மரப் பொந்துகளை இருப்பிடமாக பயன்படுத்தி வருகின்றன. சில சமயங்களில் பைக்கின் எஞ்ஜின் அல்லது பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவற்றை தற்காலிக இல்லமாக அவற்றை மாற்றிக் கொள்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இந்திய கிராமவசிகளுக்கு புதிதல்ல.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

ஆனால், இன்றைய சம்பவத்தில் வாகனங்களின் எஞ்ஜினுக்கு பதிலாக இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டில் கொடிய விஷமுடைய பாம்பு புகுந்துள்ளது. இதனை அறியாத அந்த இளைஞர் பாம்புடன் ஹெல்மெட்டை அணிந்து சுமார் 11கிமீ தூரம் வரை பயணித்துள்ளார். பின்னர் ஹெல்மெட்டை கழட்டிய பின்னரே ஹெல்மெட்டில் பாம்பு இருந்தது அவருக்கு தெரியவந்துள்ளது.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

அப்போது அந்த பாம்பு இறந்தநிலையில் இருந்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் கேரள மாநிலம் மணக்குன்னம் என்ற பகுதியில் அரங்கேறியிருக்கின்றது.

அந்த இளைஞரின் பெயர் ரஞ்ஜித் என கூறப்படுகின்றது. இவர் கன்டநாட் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த பள்ளி மட்டுமின்றி அதே பகுதியில் சுமார் 6கிமீ தொலைவில் உள்ள மற்றுமொரு பள்ளியிலும் அவர் இதே பணியைச் செய்து வருகின்றார்.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

அவ்வாறு, கடந்த 5ம் தேதி அன்று காலை 8.30 மணியளவில் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட ரஞ்ஜித், 11.30 மணி வரை முதல் பள்ளியிலும், இதன் பின்னர் இரண்டாம் பள்ளிக்கும் சென்றுள்ளார். அங்கு சேர்ந்த பின்னர் அவர் ஹெல்மெட்டை கழட்டியுள்ளார். அப்போதுதான், கொடிய விஷமுடை அந்த பாம்பு இறந்தநிலையில் கீழே விழுந்துள்ளது.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

இதைக் கண்டு அதிர்ந்துபோன ஆசிரியர் உடனடியாக மருத்துவமனை சென்று தன்னை ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டார். அதில், பாம்பு அவரை தாக்கவில்லை என்பது உறுதியானது.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

இந்த சம்பவம் மருத்துவமனை முழுவதும் வைரலானதை அடுத்து மலையாள ஊடகங்களிலும் தற்போது வைரலாகி வருகின்றது. ஹெல்மெட் இருக்கமாக இருந்த காரணத்தால் பாம்பு இறந்திருக்க கூடும் என கூறப்படுகின்றது. இதனாலயே அவரை அந்த பாம்பு தாக்காமல், உள்ளேயே இறந்திருக்கின்றது.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

பாம்புகள் அதிகம் காணப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இங்கு பல வகை இன பாம்புகளை நம்மால் காண முடியும். பெரும்பாலும் பாம்புகள் குளிர்ச்சியான ஈரம் மிகுந்த பகுதிகளில் காணப்பட்டாலும், இதனை பகல் நேரங்களில் மட்டுமே அவை பயன்படுத்துகின்றன. அதேசமயம், இரவு நேரங்களில் நாம் ஏற்கனவே கூறியதைப் போலவே இரவு நேரங்களில் கதகதப்பான இடத்தைய தங்குவதற்காக தேர்ந்தெடுக்கின்றன.

ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு: 11கிமீ தூரம் சுற்றிய வாலிபர்.. அடுத்து நடந்தது என்ன..?

இதனாலயே இரவு நேரங்களில் பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் காண முடிகின்றது. அந்தவகையில், வரும்போதுதான் இருசக்கர வாகனம், கார், காலணிகள் உள்ளிட்டவற்றில் பாம்புகள் புகுந்துக்கொள்கின்றன.

ஹெல்மெட்டில் பாம்பு புகுந்ததைப் போலவே மலப்புரம் மாவட்டத்தில் பள்ளி சிறுமியின் பள்ளி பையில் பாம்பு புகுந்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த சம்பவத்திலும் அதிர்ஷ்டவசமாக சிறுமி எந்தவொரு பாதிப்புமில்லாமல் மீட்கப்பட்டார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Venomous Snake In Helmet. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X