அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா?

பியாஜியோ வெஸ்பா மற்றும் பாரிசியன் பேஷன் ஹவுஸ் ஆன கிரிஷ்ரியன் டியோர் நிறுவனங்கள் இணைந்ததின் விளைவாக லிமிடேட் எடிசனில் வெஸ்பா 946 கிரிஷ்டியன் டியோர் ஸ்கூட்டர் மாடல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்கூட்டரின் தோற்றங்கள் முதன்முறையாக வெளிவந்துள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

லக்சரி ஸ்கூட்டராக வெளிவரவுள்ள வெஸ்பா 946, இரு நிறுவனங்களுக்கும் பெருமை அளிக்கும் விதமாக தோற்றத்தை பெற்றுள்ளது. இதை தான் தற்போது வெளியாகியுள்ள இதன் புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.

அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

தயாரிப்பு முழுவதையும் நிறைவு செய்த 946 ஸ்கூட்டரை வெஸ்பா நிறுவனம், கிரிஷ்டியன் டியோர் நிறுவனத்தின் இயக்குனர் மரியா கிரேஸியா சூரி-க்கு அனுப்பி வைத்தது. அதன்பின்பு தான் வெஸ்பா நிறுவனம் அவரது ஆலோசனைகளின்படி இந்த லிமிடேட் ஸ்கூட்டரின் டிசைனின் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

இதனால் வெஸ்பா 946 கிரிஷ்டியன் டியோர் என பெயர் பெற்ற இந்த ஸ்கூட்டர் முழுவதும் பழுப்பு நிற பெயிண்ட்டில் நீல நிற லெதர் இருக்கைகளையும், தங்க நிறத்தில் சக்கரங்கள், கண்ணாடிகள், ஹேண்டில்பார் எண்ட்ஸ் மற்றும் லக்கேஜ் ரேக் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

இவை மட்டுமின்றி பாதி-முக ஹெல்மேட், டாப் பாக்ஸ் மற்றும் டியோரின் சாய்ந்த மார்க் உடன் பேக் பேட்டர்ண்டு போன்றவையும் கூடுதல் ஆக்ஸஸரீஸ்களாக இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படவுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த லிமிடேட் எடிசனில் வழக்கமான வெஸ்பா 946 மாடலில் வழங்கப்படும் என்ஜின் அமைப்பு தான் பொருத்தப்பட்டுள்ளது.

அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

வெஸ்பாவின் 946 ஸ்கூட்டரில் 125சிசி, 3-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11.8 பிஎச்பி பவரையும், 10.33 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

அட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணியில் வெஸ்பா... இந்தியாவில் அறிமுகமாகுமா..?

இந்த ஸ்பெஷல் எடிசன் மூலமாக இணைந்துள்ள இந்த இரு பெரிய ப்ராண்ட்களும் சரியாக 1946ல் நிறுவப்பட்டுள்ளன. இதனால் வெஸ்பா 946 கிரிஷ்டியன் டியோர் ஸ்கூட்டரின் விலையை கவர்ச்சிக்கரமாக எதிர்பார்க்கலாம். அதிகாரப்பூர்வ விலை தற்போதைக்கு வெளியாகவில்லை.

கடந்த 2016ல் அறிமுகமான வெஸ்பா ஜியோர்ஜியோ ஆர்மனி எடிசனின் விலை ரூ.12 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச சந்தையில் விற்பனையை துவங்கவுள்ள புதிய 946 கிரிஷ்டியன் டியோர் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Vespa 946 Christian Dior edition breaks cover
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X