புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாக புக்கிங் செய்து வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

கொரோனாவால் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பூமியை விட்டு அகலும் வரை இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்புகள் கடினமாகவே உள்ளன. இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவில் தொடர்ந்து தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது.

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

இதனால், வர்த்தக நடைமுறைகளில் பெரும் மாற்றங்களை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன. அந்த வகையில், இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக தங்களது இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளன.

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

ஆம். வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா இந்தியப் பிரிவு இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்து இருசக்கர வாகனங்களை பெறுவதற்கான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விருப்பமான மாடலை இணையதளத்தில் தேர்வு செய்துகொண்டு ரூ.1,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

ஆன்ரோடு விலை, கடன் திட்ட விபரங்கள், மாதத் தவணையை கணக்கிடுவதற்கான வசதிகள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விரும்பும் மாடலின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்கள் இணையதளத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

முன்பதிவு செய்தவுடன் அருகிலுள்ள வெஸ்பா, ஏப்ரிலியா டீலர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆவண நடைமுறைகள், கடன் உதவி திட்டங்களை பெறுவதற்கான உதவிகள் செய்து தரப்படும். மேலும், அனைத்து நடைமுறைகளுடன் முடிந்தவுடன் வீட்டிலேயே புதிய வாகனம் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 சிறப்புத் தள்ளுபடியும் உள்ளது. இது குறிப்பிட்ட காலத்திற்கான தள்ளுபடி சலுகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம்!

அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவோருக்கு இன்னும் சில சேமிப்புச் சலுகைகளையும் பெறும் வாய்ப்பு இருப்பதாக வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Most Read Articles

மேலும்... #வெஸ்பா #vespa #aprilia
English summary
Piaggio India has introduced new online booking platforms for Vespa and Aprilia in the Indian market. Both brands now feature an exclusive e-commerce platform for its customers to make an online booking.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X