புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

பிஎஸ்6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பிரிமீயம் வகை மாடல்களாக வெஸ்பா ஸ்கூட்டர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியம் மிக்க டிசைன் அம்சங்களுடன் தனித்துவமான வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளன. தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

இந்த சூழலில், பிஎஸ்6 எஞ்சினுடன் வெஸ்பா ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 150 சிசி ரகத்தில் நேற்று வெஸ்பா விஎக்ஸ்எல் 149 மற்றும் எஸ்எக்ஸ்எல் 149 ஸ்கூட்டர்கள் வெளியிடப்பட்டன. அதேபோன்று, வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

ஏற்கனவே இருந்த வெஸ்பா எலிகண்ட் 150 ஸ்கூட்டருக்கு மாற்றாக இந்த எலிகண்ட் 149 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லாக் டவுன் முடிந்தவுடன் விலை அறிவிக்கப்படும்.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

இந்த ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 149சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 தரமுடைய இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.46 பிஎஸ் பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

இந்த ஸ்கூட்டர் 1,770 மிமீ நீளமும், 690 மிமீ அகலமும், 1,140 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் வகை இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெஸ்பா எலிகண்ட் ஸ்கூட்டரின் டிசைன் அம்சங்கள் மிகவும் வசீகரமாக உள்ளன.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

வெஸ்பா எலிகண்ட் ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் 200 மிமீ வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் சைடு ஆர்ம் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் டியூவல் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் வெளியீடு... சிறப்பம்சங்கள் விபரம்!

இந்த மாத இறுதியில் வெஸ்பா எலிகண்ட் 149 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இதன் பிஎஸ்4 மாடலில் 154சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 149சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு கட்டணம் குறையும் என்ற நோக்கில் எஞ்சின் சிசி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Italian vehicle maker, Piaggio has revealed the new Vespa Elegante scooter with BS6 compliant engine in India.
Story first published: Wednesday, May 6, 2020, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X