கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம்!

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியோ ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா பிராண்டுகளில் பிரிமீயம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்களுடன் புதிய ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஸ்கூட்டர்கள் மோனோகாக் ஸ்டீல் பாடியுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், யுஎஸ்பி சார்ஜர், பூட் ரூம் லைட் உள்ளிட்டவை இரண்டு மாடல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

இந்த இரண்டு புதிய வெஸ்பா ஸ்கூட்டர்களிலும் முன்சக்கரத்திற்கான ட்வின் பாட் காலிபருடன் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. தவிரவும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஸ்கூட்டர்களில் 125 சிசி மற்றும் 149 சிசி என இரண்டு பிஎஸ்6 எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாடல்களில் வழங்கப்படும் 125 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.8 பிஎச்பி பவரையும், 9.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டாவது தேர்வாக வந்துள்ள 149 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.3 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

புதிய ஏப்ரிலியா ஸ்டோரம் 125 ஸ்கூட்டரும் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. முன்சக்கரத்தில் ட்வின் பாட் காலிபருடன் கூடிய 220 மிமீ டிஸ்க் பிரேக்கும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

இந்த ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டரில் 125 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.8 பிஎச்பி பவரையும், 9.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரில் மற்றொரு முக்கிய அம்சமாக 12 அங்குல கருப்பு வண்ண அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மாடலுக்கு ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், 150 மாடலுக்கு ரூ.1.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125 மாடலுக்கு ரூ.1.13 லட்சம் விலையும், 150 மாடலுக்கு ரூ.1.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், ஏப்ரிலியா ஸ்டோர்ம் ஸ்கூட்டர்கள்

இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களுக்கும் வெஸ்பா இந்தியா மற்றும் ஏப்ரிலியா இந்தியா இணையதளங்கள் மூலமாக புக்கிங் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக வெஸ்பா ஸ்கூட்டரை புக்கிங் செய்தால் ரூ.2,000 வரையிலும், ஏப்ரிலியோ ஸ்டோர்ம் ஸ்கூட்டருக்கு ரூ.1,000 வரையிலும் சேமிக்கும் வாய்ப்பை பியாஜியோ நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles

English summary
Piaggio has launched Vespa VXL, SXL facelift and Aprilia Storm facelift scooter models in India.
Story first published: Monday, July 20, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X