துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்.. அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

துப்பாக்கி படத்தில் இளைய தளபதி விஜய்-க்கு வில்லானாக நடித்த வித்யுத் ஜம்வல் மிக மிக விலையுயர்ந்த, அதீத திறனை வெளிப்படுத்தும் பைக்கை வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இளைய தளபதி நடிகர் விஜயுடைய வெற்றிப் படங்களில் துப்பாக்கியும் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படத்தில் நம்ம ஹீரோவுக்கு போட்டியாக மாசான உடல் தேகத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யுத் ஜம்முவல்.

இவர், தமிழில் தோன்றுவதற்கு முன்னரிலிருந்தே பாலிவுட்டில் பணியாற்றி வருகின்றார். ஆகையால், தமிழ் மட்டுமின்றி பாலிவுட் போன்ற பல திரையுலகில் பிரபலமானவராக திகழ்ந்து வருகின்றார்.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

குறிப்பாக, கமாண்டே தொடர் மற்றும் ஃபோர்ஸ் போன்ற திரைப்படங்களில் ஆக்சன் வீரர் கதாபாத்திரத்தை கணகச்சிதமாக செய்திருப்பார் வித்யுத் ஜம்வால். இதனால், இவருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு நிலவுகின்றது. அதிலும், இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ, அந்த கதாபாத்திரத்தில் அப்படியே மூழ்கிவிடுவார் என்ற புகழ்பாட்டு வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. இதுபோன்று, நல்ல நடிப்பு திறனினால் இவர் தற்போது ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் வலைத்துப்போட்டுள்ளார். குறிப்பாக பெண் ரசிகர்கள்.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இந்நிலையில், வித்யுத் ஜம்வால் மிகவும் விலையுயர்ந்த பைக் ஒன்றை பயன்பாட்டிற்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறிப்பாக, மாஸான நடிகர் மிகவும் அதிதிறன் கொண்ட பைக்கை வாங்கியிருப்பது ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கின்றது. அதிலும், பைக்கின் விலையே வைரலுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அப்படி என்ன பைக்கை அவர் வாங்கியிருக்கின்றார் என்றுதானே கேட்கிறீர்கள்.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

வித்யுத் ஜம்வால் டிரையம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3ஆர் பைக்கைதான் வாங்கியிருக்கின்றார். இந்த பைக்கை டிரையம்ப் நிறுவனம் கடந்தாண்டின் இறுதியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தொடர்ந்து, நடப்பாண்டின் ஜனவரி மாதமே புக்கிங் செய்தவர்களுக்கான டெலிவரி தொடங்கியது.

இதற்கான புக்கிங்கை முன்னரே செய்ததன் அடிப்படையில் தற்போது டிரையம்ப் ராக்கெட் 3ஆர் பைக் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இந்த பைக்கை டிரையம்ப் நிறவனம் ரூ. 18 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்து வருகின்றது. இது, வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். இதனை ஆன்-ரோடில் வாங்கும் மாநிலம் வாரியான வரிக்கேற்ப கூடுதலாக ஒன்று முதல் இரண்டு லட்சங்கள் அதிகரிக்கலாம். இது மேலும் அதிகரிக்கவும் வாயப்புகள் உண்டு.

இத்தகைய பைக்கையே தற்போது துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் டெலிவரி பெற்றிருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரே பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

பிரிட்டிஷ் நாட்டு நிறுவனமான டிரையம்ப்பின் பிரிமியம் பைக்குகளில் ராக்கெட் 3ஆர் பைக்கும் ஒன்றாகும். இந்த பைக்கிற்கான புக்கிங்குகளை அந்நிறுவனம் 2019 டிசம்பர் மாதமே இந்தியாவில் தொடங்கிவிட்டது. இதையடுத்து, முதல்கட்டமாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி மாதம் டெல்லி, புனே, சண்டிகர், மும்பை, ஹைதராபாத், அஹமதாபாத், பெங்களூர் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளிலும் செய்யப்பட்டது.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இதையடுத்து, இரண்டாம் கட்டமாக மிஞ்சிய முக்கிய நகரங்களில் டெலிவரிக்கான பணியை டிரையம்ப் தொடங்கியிருக்கின்றது.

இந்த பைக்கில் மிக மிக அதிக சக்திவாய்ந்த 2,500 சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சசமாக 167 பிஎஸ்/165 பிஎச்பி பவரையும் 6,000 ஆர்பிஎம்மிலும், 221 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் அதீத திறன் கொண்ட எஞ்ஜின் ஆகும்.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இந்த திறன் உங்களை மலைப்படைய வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற அதிக திறன் கொண்ட பைக்குகள் மிக சொற்பளவிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இந்த ராக்கெட் 3 ஆர் காட்சியளிக்கின்றது.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

தொடர்ந்து, தற்போது இந்தியாவில் இந்த பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனையாகும் பைக்குகளை விட 71 சதவீதம் அதிக திறனை வெளிப்படுத்தும் பைக்காக இது இருக்கின்றது.

தற்போது, இந்த பைக் இந்தியாவில் இரு விதமான நிறத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவ்வாறு, கோரோசி சிவப்பு மற்றும் பேந்தம் கருப்பு ஆகிய இரு நிறத் தேர்வு வழங்கப்படுகின்றது.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இந்த பைக் அதிக திறனை வெளிப்படுத்துவற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சாலையில் எந்தவொரு தங்குதடையுமின்றி செல்வதற்கு குறிப்பிட்ட ட்யூன்-அப்பே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, பழைய எஞ்ஜினில் காணப்பட்ட சில இடையூறுகளை டிரையம்ப் மாற்றியமைத்திருக்கின்றது.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

அந்தவகையில், பழைய எஞ்ஜின் 18 கிலோ எடை குறைவானதாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3ஆர் பைக் முற்றிலும் புதிய அலுமினியம் ஃப்ரேம்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனாலும், அதன் எடைக்குறைந்து நல்ல திறனை வெளிப்படுத்தும் நிலைக்கு மாறியிருக்கின்றது.

துப்பாக்கி பட வில்லன் வாங்கிய பல லட்சம் விலையுள்ள பைக்... அம்மாடியோ இந்த விலைக்கு காரையே வாங்களாமே..!

இதுதவிர அதீத திறனுக்கு பல வேலைப்பாடுகளை டிரையம்ப் செய்திருக்கின்றது. இந்த முயற்சிகளின் அதிதிறன் வாய்ந்த பைக்காக டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் களமிறங்கியிருக்கின்றது. மேலும், வித்யுத் ஜம்வால் போன்றோரை கவர்ந்தும் வருகின்றது. இதற்கு பைக்கின் திறன் மட்டுமின்றி முரட்டுத்தனமான உருவ தோற்றமும் ஓர் காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vidyut Jammwal Buys Triumph Rocket 3 R. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X