போலீஸில் உருவாக்கப்பட்ட புதிய பெண்கள் படை... எதற்காக என தெரிந்தால் கண்டிப்பா அசந்து போயிருவீங்க...

காவல் துறையில் முழுக்க முழுக்க பெண்களை கொண்ட புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் மாடர்ன் பைக்குகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மிக பெரியது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் பெற்றுள்ளது.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை சொந்தமாக்க வேண்டும் என்ற லட்சியம் பலருக்கும் இருந்து வரும் நிலையில், பெங்களூர் மகளிர் போலீசாருக்கு தற்போது ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனமும், பெங்களூர் போலீசாரும் கை கோர்த்துள்ளனர்.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டும் அடங்கிய மோட்டார்சைக்கிள் ரைடிங் படையை இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இந்த படைக்கு ‘We for Women' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக பெங்களூர் நகரை உருவாக்கும் பணிகளை இந்த படை மேற்கொள்ளும்.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

இது தொடர்பாக பெங்களூர் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் தற்போது 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த படையை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடக்கும். இந்த படையில் உள்ள பெண் போலீசார் பெங்களூர் நகரை பாதுகாப்பாக வைத்திருக்கும் பணிகளை செய்வார்கள்.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும், மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்ட பயிற்சியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

இதில், ராயல் என்பீல்டு ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மற்றும் கிளாசிக் 350 சிக்னல்ஸ் போன்ற மாடல்கள் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பயிற்சியானது கடந்த டிசம்பர் மற்றும் நடப்பு ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. இதில், பெங்களூர் டிராபிக் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் மோட்டார்சைக்கிளை ஓட்டி பயிற்சி பெற்றனர்.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தை சேர்ந்த சிறப்பு குழுவின் மேற்பார்வையில் பெங்களூர் மகளிர் போலீசாருக்கு இந்த பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த சிறப்பு குழுவானது, தொழில்முறை ரைடிங் திறன்களை சொல்லிக்கொடுத்து, பெங்களூர் மகளிர் போலீசாருக்கு உதவி செய்தது.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

மோட்டார்சைக்கிள் ரைடிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், ரைடிங் திறன்களை அதிகப்படுத்தி கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது ஏதேனும் சவாலை சந்திக்க நேரிட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது? என்ற பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

இந்த படையில் உள்ள மகளிர் போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக பெங்களூர் நகரை மாற்றுவதற்கு, ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். பெங்களூர் காவல் துறை மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த முயற்சி, சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடுகளை களைய உதவி செய்யும்.

பெங்களூர் மகளிர் போலீசாருக்கு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள்... எதற்காக தெரியுமா?

குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்த பகுதிகளில், இந்த சிறப்பு திட்டம் மூலம், பாலின பாகுபாடுகள் களையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, பெங்களூர் காவல் துறை மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இந்த திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.

Most Read Articles

English summary
‘We For Women’ Initiative : Bangalore Lady Sub Inspectors Get Royal Enfield Himalayan Bikes. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X