ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்.. விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

பைக்குகளில் ஹெட்லைட் மற்றும் நம்பர் பிளேட் இருப்பது எப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று மற்றொன்றையும் இந்த பட்டியலில் மத்திய அரசு கூடுதலாக இணைக்க இருக்கின்றது. அது என்னவென்பது பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் டூ வீலர்களுக்கென பிரத்யேக விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அது, இன்சூரன்ஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை இயக்குபவருக்கு மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் உள்ளிட்ட விதிகளை கட்டாயப்படுத்துகின்றது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

இதனை கடைபிடிக்காதவர்களுக்கு தக்க தண்டனையாக உச்சபட்ச அபராதத்தை புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் வழங்கி வருகின்றது.

இந்நிலையில், மத்திய அரசு இருசக்கர வாகனங்களுக்கான விதியில் கூடுதலாக ஓர் புதிய விதியை இணைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பாணை ஒன்றையும் அது வெளியிட்டிருக்கின்றது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

இதற்காக, மோட்டார் வாகன சட்டம் 1988-ல் சிறிய மாற்றத்தைச் செய்து 'மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்' கடந்த வாரம் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 11) அன்று வெளியிட்டது. இந்த புதிய விதிக்கு 'மத்திய மோட்டார் வாகன விதிகள் 2020' என்ற பெயரையும் அது வைத்திருக்கின்றது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

மாற்றம் செய்யப்பட்ட இந்த புதிய விதி வருகின்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிகள் இனி வரும் காலங்களில் இதனையும் கடைபிடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படி என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றுதானே கேட்குறீங்க?... வாங்க அதையும் பார்த்துவிடலாம்...

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

புதிய விதியில், வாகனத்திற்கான விண்ட் ஸ்கிரீன், ஸ்பேர் வீல், லக்கேஜ் வைக்கும் இடம் மற்றும் இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்பவர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை கட்டாயமாக்கியுள்ளது.

இதில், மிகவும் கவனிக்கக்கூரிய இடத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவர்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டுள்ள விதி இருக்கின்றது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

குறிப்பாக, டூ வீலர் பின்னிருக்கை பயணிக்காக இருசக்கர வாகனத்தில் கை பிடி இருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. இதனை பக்கவாட்டிலே அல்லது பயணியின் முன்பக்கத்திலோ நிறுவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இத்துடன், கூடுதலாக கவனமளிக்கின்ற வகையில் ஓர் மாற்றம் இருக்கின்றது. இது, பின் பக்க வீலை பேனல் அல்லது ஏதேனும் மறைப்பைக் கொண்டு பாதியளவு மூட வேண்டும் மற்றும் ஃபூட் ரெஸ்ட் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் சைட் ஸ்டாண்டு மற்றும் பின்பக்க இருக்கையாளருக்கான ஃபூட் ரெஸ்ட் உள்ளிட்டவற்றை கூடுதல் கட்டணத்தில் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. இதைதான் விதி 123இன் படி மாற்றியமைத்திருக்கின்றது மத்திய அமைச்சகம்.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

ஆகையால், இனி இவையனைத்தும் வாகன கட்டணத்துடனேயே உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களுக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது.

முழுக்க முழுக்க பின்னிருக்கை வாசியை மையப்படுத்தியே இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், துணி அல்லது வேறேதேனும் பொருள் சிக்கி விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கிலும் இதனை அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

முன்னதாக, நடைபெற்ற பல்வேறு விபத்துகள் வாகனத்தில் துணி அல்லது புடவை சிக்குதல், ஃபூட் ரெஸ்ட் மற்றும் கை பிடி இல்லாத காரணத்தால் கீழே விழுதல் உள்ளிட்டவற்றை சார்ந்தே நடைபெற்றிருக்கின்றது. ஆகையால், இவற்றைக் குறைக்கும் விதமாக அரசு புதிய விதிகளை விரைவில் கட்டாயப்படுத்த உள்ளது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

குறிப்பாக, பைக்கின் பின்னிருக்கையில் அமர்பவர்களுக்கு போதுமான பிடிமானம் கிடைப்பதில்லை. ஆகையால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதிவேகத்தில் பைக் பறக்கும் போது கூடவே பின்னால் அமர்பவர்களின் புடவை அல்லது துணியும் பறக்கின்றது. இது பல நேரங்களில் வீலில் சிக்கி விபத்தை ஏற்படுத்துகின்றன.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

இதுபோன்ற அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணும் விதமாகவே அரசு இப்புதிய விதியை உருவாக்கியுள்ளது. அதனை அக்டோபர் மாத்தில் நடைமுறைக்கும் கொண்டு வரவிருக்கின்றது.

ஏற்கனவே விபத்தைக் குறைக்கும் விதமாக பல்வேறு விதிகளை அரசு கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

அரசின் இந்த புதிய உத்தரவால் 2020 அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் பாதியளவு மூடப்பட்ட பின் பக்க வீலுடன் காட்சியளிக்க இருக்கின்றது. இதனால், இருசக்கர வாகனங்களின் விலை உயரும் அபாய நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால், அது கடுமையானதாக இருக்காது என்று கூறப்படுகின்றது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

அதேசமயம், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவில் புடவைகளுக்கான பாதுகாப்பு உபகரணம் என குறிப்பிட்டு கூறப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அரசின் அறிவிப்பு முழுமையான பலனை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

ஏற்கனவே, இந்திய இருசக்கர வாகன விரும்பிகள் மட்குவார்டுகள் தங்களின் பைக்குகளில் இருப்பதையே விரும்புவதில்லை. அவர்கள் தங்களின் பின்பக்க வீல் நேக்கட் வகையில் காட்சியளிக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

ஆனால், இது பின்பக்கத்தில் அமர்பவர் மட்டுமின்றி பைக்கிற்கு பின்னால் வருபவர்களும் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனர்.

ஹெட்லைட் - நம்பர் பிளேட்போல் இனி பைக்குகளில் இதுவும் கட்டாயம்... விரைவில் அறிமுகமாகிறது புதிய விதி..!

குறிப்பாக, மழைக் காலத்தில் பின்பக்க வீல் சேற்றை வாரி இறைக்கும் ஓர் கருவியாக மாறிவிடுக்கின்றன. அப்போது, மட்குவார்ட் நீக்கப்பட்ட பைக்கின் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது சகதியுடன் கலந்து மழை நீர் வாரி இறைக்கப்படுகின்றது. அது, சில நேரங்களில் கண்களில் பட்டு, தற்காலிக குருட்டு தனத்தை ஏற்படுத்தி விபத்திற்கு வழி வகுக்கின்றது. ஆகையால், இதற்கும் விரைவில் இந்த புதிய உத்தரவு தீர்வு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதேபோன்று டோல்கேட்டுகளில் கட்டணம் கட்டுவதற்கு சமீபத்தில் ஃபாஸ்ட் டேக் திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால், இதனால், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உண்மையை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்பு கொண்டது. இதைப்பற்றிய தகவலை கீழே காணலாம்.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

முதலில் டிசம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு பின்னர் டிசம்பர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இறுதியாக இந்த காலக்கெடு கடந்த ஜனவரி 15ம் தேதி நிறைவடைந்தது. டோல்கேட்களில் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்ற முக்கியமான காரணத்திற்காகவே பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

பாஸ்ட்டேக் என்பது (Radio-frequency Identification - RFID) ஸ்டிக்கர் ஆகும். இதனை வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் ஒட்டுவதுடன், அதற்கு முன்னதாகவே ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்தியாவில் எந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எந்த டோல்கேட்டிற்கு சென்றாலும், அங்குள்ள ரீடர்கள் இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும்.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதன்பின் அதற்குரிய கட்டணம் உங்கள் கணக்கில் இருந்து கழித்து கொள்ளப்படும். எனவே கட்டணம் செலுத்த நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை. இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சமாகும் என்பதுடன், வாகனங்களின் தடையற்ற இயக்கமும் உறுதி செய்யப்படுகிறது. அதேபோல் காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

ஆனால் பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது முதலே அது தொடர்பாக ஒரு சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து கொண்டு வருவதாக புகார்கள் எழுந்தன. தற்போது அந்த புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பாராளுமன்றத்திலேயே இதனை ஒப்புக்கொண்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

மத்திய டோல் பிளாசா டிராபிக் மானிட்டரிங் சிஸ்டத்திடம் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் உண்மையில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த டோல் கலெக்ஸனில் பாஸ்ட்டேக்கின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கு மேலாக உள்ள நிலையிலும், வாகனங்கள் காத்திருக்கும் நேரம் இவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது இந்த உண்மையை பாராளுமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, இந்த உண்மையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புகொண்டார்.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் குறிப்பிட்ட லேன்களில் காத்திருக்கும் நேரம் உண்மையிலேயே அதிகரித்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனினும் பாஸ்ட்டேக் உடன் கூடிய கார்களின் காத்திருக்கும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். ஆனால் ஹைப்ரிட் லேன்களில்தான் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

ஹைப்ரிட் லேன்களில் ரொக்கமாகவும் கட்டணம் செலுத்தலாம். மேலும் அங்கு பாஸ்ட்டேக்கும் ஏற்று கொள்ளப்படும். ஏற்கனவே குறிப்பிட்டதைபோல், பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது முதலே காத்திருக்கும் நேரம் அதிகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதனை மத்திய அரசே பாராளுமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

மத்திய டோல் பிளாசா டிராபிக் மானிட்டரிங் சிஸ்டம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 6 மில்லியன் வாகனங்கள் டோல்கேட்களை கடக்கின்றன. அதாவது சுமார் 60 லட்சம் வாகனங்கள். எனவேதான் டோல்கேட்களில் நெரிசலையும், காத்திருக்கும் நேரத்தையும் குறைப்பதற்காக பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Wheel Cover Mandatory For MotorCycle. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X