Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இரு எக்ஸாஸ்ட் குழாய்களை பார்த்துள்ளீர்களா? இங்க பாருங்க...
உலகிலேயே முதன்முறையாக இணையான-இரட்டை எக்ஸாஸ்ட் அமைப்பு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன், இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான அட்வென்ச்சர் ரக பைக்குகளுள் ஒன்று. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற ஆஃப்-ரோடு வாகனம்.

இவ்வாறான சில அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள் நம் நாட்டில் விற்பனையில் இருந்தாலும், குறைவான என்ஜின் ஆற்றல் உடன் குறைவான விலையில் இந்த தயாரிப்பை ராயல் என்பீல்டு வழங்குவதால் பல அட்வென்ச்சர் பிரியர்களின் முதல் தேர்வாக ஹிமாலயன் விளங்குகிறது.

அதிக ஆற்றலை வழங்கக்கூடிய பெரிய என்ஜின்களை ஹிமாலயனில் வழங்குமாறு ராயல் என்பீல்டு பைக் பிரியர்கள் தொடர்ந்து கேட்டவாறுதான் உள்ளனர். ஆனால் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டோ எதிர்காலத்திற்கு வேறு சில திட்டங்களை வைத்துள்ளது.

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், நாம் இந்த செய்தியில் பார்க்க போவது இரட்டை-எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கை பற்றி. வழக்கமாக ஹிமாலயனில் ஒரு எக்ஸாஸட் குழாயை மட்டுமே ராயல் என்பீல்டு பொருத்துகிறது.

ஆனால் இந்த பைக்கில் அதன் உரிமையாளர் அபினவ் பாட் என்பவர் இரு எக்ஸாஸ்ட் குழாய்களை பொருத்தியுள்ளார். இதை அவர் தாமாக பொருத்தவில்லை, பஞ்சாப், பாட்டியாலாவில் மன்ப்ரீட் சிங் என்பவரால் நடத்தப்படும் ஷெகால் ஆட்டோஸ் வொர்க்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மூலம் செய்து முடித்துள்ளார்.
இது தொடர்பான இந்த வீடியோ அபினவ் பாட்-இன் யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் இரட்டை-எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட உலகின் முதல் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் என கூறப்படுகிறது.

இவ்வாறான எக்ஸாஸ்ட் அமைப்பை பெற்ற வேறெந்த ஹிமாலயன் பைக்கை பற்றியும் இதற்குமுன் பார்த்ததுபோல் ஞாபகம் இல்லை. இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்துவதற்காக பைக்கின் சேசிஸில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி என்ஜின் இரு எக்ஸாஸ்ட் குழாய்களுக்கு நடுவில் மிக கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. என்ஜின் அமைப்பை பற்றி கூறியே ஆக வேண்டும், ஏனெனில் இந்த பைக்கில் 90களில் விற்பனையில் இருந்த சுஸுகி ஜிஎஸ்400இ பைக்கின் 400சிசி டிஒஎச்சி இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 39 எச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை பெற முடியும். இது வழக்கமான ஹிமாலயன் என்ஜினை காட்டிலும் 15 எச்பி அதிகமாகும். இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு மாற்றாக 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த மாடிஃபை பைக்கில் 36மிமீ-இல் இரு மிகுனி கார்புரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை இந்த வீடியோவில் பாட் தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் இந்த மாடிஃபை ஹிமாலயன் பைக்கை எந்தவொரு தடையும் இல்லாமல் ஒரு நாளைக்கு 140கிமீ தூரத்திற்கு இயக்கி செல்ல முடியும் எனவும் அதிகப்பட்சமாக 150kmph வேகத்தில் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.