லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

கூகுள் ஆண்டவரை திறந்தவுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்போது காண நேரும். அவ்வாறு, இன்று நாம் பார்த்த இந்த மோட்டார்சைக்கிள் சுவாரஸ்யங்களை தாங்கி நிற்கிறது. கடந்த 2004ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் இன்று வரை கூகுளில் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

பொதுவாக பைக்குகளில் இரண்டு பேர் மட்டுமே செல்லக்கூடிய வடிவமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கே நீங்கள் பார்க்கப்போகும் உலகின் மிக நீளமான மோட்டார்சைக்கிளில் 8 பேர் வரை பயணிப்பதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது.

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

அனகோண்டா என்று பெயரிடப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு அனகோண்டா பாம்பு போலவே ராட்சத தோற்றத்தில் இருக்கிறது. இந்த பைக்கில் முக்கிய அம்சமாக ஹார்லி டேவிட்சன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

மெக்கில் என்பவர்தான் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். நீளமான கார்களை லிமோசின் என்று குறிப்பிடுவது போல இதனை லிமோசின் பைக் என்றும் குறிப்பிடுகின்றனர்.

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளின் முக்கிய பாகங்கள், எஞ்சின் உள்ளிட்டவற்றுடன் மூன்று சக்கர ட்ரிக்கி மோட்டார்சைக்கிள் கிட்டை வாங்கி இந்த அனகோண்டா மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறார்.

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

இந்த பைக்கில் இரண்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பின்னால் பொருத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் மட்டுமே செயல்படும். முன்னால் இருக்கும் எஞ்சின் பார்வைக்காக மட்டுமே பொருத்தியிருப்பதாக கண் சிமிட்டுகிறார் மெக்கில்.

லிமோசின் கார் பார்த்திருப்பீங்க... லிமோசின் பைக் பார்த்திருக்கீங்களா?

இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளை 640 மணிநேரம், 6 மாதங்கள் உழைப்பில் உருவாக்கி இருப்பதாக அவர் கூறுகிறார். இதற்கு செலவு செய்த தொகையை வசூலிக்கும் விதத்தில், வாடகைக்கு விட்டிருப்பார் என்று நினைத்தால் தவறு. அவர் இந்த மோட்டார்சைக்கிளை கண்காட்சிகளில் நிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களுக்கு செலவிடுகிறாராம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are some interesting bits about the world's longest limo type bike, The Harley Davidson Anagonda.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X