இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

கொரோனா வைரசினால் உருவான இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்விக்கின்ற காரியத்தை யமஹா நிறுவனம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான சூழ்நிலையில் அரசுக்கும், துயரத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கும் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களே அதிகளவில் உதவிகளை செய்து வருகின்றன.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், வாகனம் மற்றும் அதைச் சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்களின் உதவி அளப்பறியாதது. ஆம், வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிதியுதவி மட்டுமின்றி மருத்துவ உபகரண உதவியையும் வழங்குகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பன்முனை உதவிகளை வாகனங்கள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் அரசுக்கு வழங்கி வருகின்றன.

MOST READ: இந்த நேரத்திலும் சம்பள உயர்வு... பிரபல நிறுவனம் அசத்தல்... காரணம் தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

மேலும், வேலையிழந்த மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக அல்லல்படும் மக்களுக்கு தேவையான உதவிகளையும் அவை செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் அல்லாத குக்கிராமங்களில் மருத்துவ கேம்ப்களை அமைத்து பரிசோதனை மற்றும் கொரோனா பற்றிய பிரச்சாரங்களை அவை செய்து வருகின்றன. இத்துடன், சானிட்டைசர் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

இந்நிலையில், யமஹா நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிலவற்றிற்கு உதவும் விதமாக நிதியுதவியை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வழங்கியிருப்பது சற்று குறைந்த தொகை என கூறப்படுகின்றது. இருப்பினும், அந்நிறுவனம் வழங்கியிருக்கும் நேரமானது மிகவும் இக்கட்டான நிலையாக உள்ளது.

MOST READ: கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி!

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

அதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் அனைத்துத் துறையும் தற்போதுதான் லேசான இயக்கத்தைப் பெற தொடங்கியிருக்கின்றன. முன்னதாக 60 நாட்களுக்கும் அதிகமாக இயக்கமற்ற நிலையிலேயே அவை இருந்தன. இதனால், ஏற்றுமதி, இறக்குமதி என எதையும் செய்ய முடியாத நிலைக்கு அனைத்துத்துறையும் தள்ளப்பட்டன. இதேபோன்று, உற்பத்தி மற்றும் விற்பனையைிலும் மிக மிக கடுமையாக சரிவே நீடிக்கின்றது.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஒரு யூனிட் வாகனத்தைக்கூட விற்க முடியாமல் வாகன நிறுவனங்கள் கடந்த காலங்களில் திணறின. இதனால், பல நிறுவனங்களின் வருமானம் பூஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையிலும் ஒரு சில நிறுவனங்கள் நன்றி கடனை தீர்க்கும் விதமாக நிதியுதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செய்தன. சிறந்த உதாரணம் டாடா நிறுவனம், இது சுமார் 1,500 கோடி டாடா குழுமத்தின் வாயிலாக வழங்கியது.

MOST READ: இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில்தான் தற்போது யமஹா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ரூ. 61.5 லட்சத்தை கொரோனா நிதியுதவியாக வழங்கியுள்ளது. இதில், ரூ. 25 லட்சம் தமிழகத்திற்கும், மற்றொரு 25 லட்ச ரூபாய் உத்தரப்பிரதேச அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ரூ. 11.5 லட்சத்தை பிரதம மந்திரி நிதி திட்டத்திற்கு வழங்கியிருக்கின்றது, யமஹா.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

உபி மற்றும் தமிழகத்தில் யமஹா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குவது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணத்தினாலயே தனித்துவமாக இவ்விரு மாநிலங்களுக்கும் மட்டும் யமஹா நிதியுதவி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது நாட்டில் மூன்றாவது ஆலையாக ஹரியானாவில் தொழிற்சாலையை தொடங்குவதற்கான பணிகளை யமஹா மேற்கொண்டு வருகின்றது.

MOST READ: ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை!

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

எனவே, விரைவில் அங்கிருந்தும் யமஹா இருசக்கர வாகனங்கள் உற்பத்திச் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் நிதியுதவியானது, யமஹா அதன் நிறுவன ஊழியர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலித்த தொகை என கூறப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் இருந்தும் இந்த நன்கொடையை அது வசூலித்து வழங்கியுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

யமஹா நிறுவனத்தில் சர்வீஸ் மற்றும் பணியிடத்தைப் பொருத்து வெள்ளைக் காலர் மற்றும் நீல காலர் என பிரிக்கப்படுகின்றது. இவர்களிடத்தில் இருந்துதான் சிறிய சிறிய தொகையாகப் பெற்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு யமஹா நிதியுதவி செய்துள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

யமஹா நிறுவனம், தற்போது அதன் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியில் மும்பரம் காட்டி வருகின்றது. இதுமட்டுமின்றி, விற்பனை மற்றும் வருமானத்தை ஈட்டும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்-6 தர ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எஃப்ஐ ஆகிய மாடல் ஸ்கூட்டர்களின் விலையை அது கணிசமாக உயர்த்தியது.

இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

அதாவது, ரூ. 800 என்ற விலையை அனைத்து வேரியண்டுகளுக்கும் உயர்த்தியது. இதனால், ரூ. 66,730க்கு விற்கப்பட்டு வந்த ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிரம் மாடல் ரூ. 67,530க்கு உயர்ந்தது. இதேபோன்று, மற்ற வேரியண்டுகளும் அதன் விலையில் ரூ. 800 உயர்வைப் பெற்று காஸ்ட்லியான ஸ்கூட்டர்களாக மாறியுள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Donates Rs. 25 Lakh For Combat COVID-19. Read In Tamil.
Story first published: Friday, June 5, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X