ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

யமஹா நிறுவனம் புதிய ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர் மாடலை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் இந்த 125சிசி ஸ்கூட்டரின் விலை ரூ.800 அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெலிவிரியை துவங்கியிருந்த யமஹாவின் இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு எக்ஸ்ஷோரூம் விலையாக அறிமுகத்தின்போது ரூ.66,430 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் விலை ரூ.67,230 என இந்நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

இயக்க ஆற்றலுக்கு இந்த ஸ்கூட்டர் மாடலில் 125சிசி ப்ளூ கோர், சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. யமஹாவின் மற்ற அனைத்து பழைய ஸ்கூட்டர் மாடல்களையும் விட ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் எரிபொருள் திறன் 16 சதவீதம் அதிகமாகும்.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

புதிய ஃபேஸினோ ஸ்கூட்டரில் புதியதாக 12 இன்ச் அலாய் சக்கரங்கள், பல-செயல்பாடுகள் கொண்ட காரின் சாவி, யுஎஸ்பி சார்ஜிங், சுழலக்கூடிய ஹூக் மற்றும் சைடு-ஸ்டாண்ட் பயன்பாட்டில் இருந்தால் தானாக ஆஃப் செய்துக்கொள்ளும் என்ஜின் ஸ்விட்ச் உள்ளிட்ட வசதிகள் கொண்டுவரப்பட்டன.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

இதில் சைடு-ஸ்டாண்ட் கட்-ஆஃப் ஸ்விட்ச் இந்திய சந்தைக்கு மிக புதியது. இவற்றுடன் இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ் மற்றும் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டங்கள், ட்ராஃபிக் மோட் உடன் உள்ளன. இதில் ட்ராஃபிக் மோட் மூலமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் விரைவாக செயல்பட முடியும்.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

மேலும் யமஹா நிறுவனம் ஃபேஸினோ மாடலின் சேசிஸ் மற்றும் ஃப்ரேமையும் அப்டேட் செய்துள்ளது. இதனால் விற்பனை நிறுத்தப்பட்ட இதன் முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் இந்த புதிய ஸ்கூட்டர் 4 கிலோ குறைவாக 99 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

டிசைனை பொறுத்துவரையில் புதிய ஃபேஸினோ மாடல் பெரும்பான்மையான லைன்கள் மற்றும் உடற் நிறங்களை அதன் முந்தைய வெர்சன் ஸ்கூட்டர் மாடலில் இருந்து அப்படியே பெற்றுள்ளது. இருப்பினும் சந்தையில் மற்ற ஸ்கூட்டர்களுக்கு இணையாக இந்த ஸ்கூட்டரில் கணிசமான எண்ணிக்கையில் க்ரோம்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

அதேபோல் நிறத்தேர்வுகளையும் அதிக எண்ணிக்கையில் இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு யமஹா நிறுவனம் வழங்கியுள்ளது. இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள புதிய ஃபேஸினோ ஸ்கூட்டரின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.69,930 ஆக உள்ளது. இதன் டாப் ட்ரிம்மிற்கு சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு பெயிண்ட் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபேஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் விலையை அதிகரித்தது யமஹா...

ஃபேஸினோ, ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யமஹா நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட முதல் ஸ்கூட்டர் மாடலாகும். இந்த 125சிசி எஃப்ஐ ஸ்கூட்டரில் கூடுதலான ஆற்றல் மற்றும் தரமான எரிபொருள் திறனை இந்நிறுவனம் வழங்கியுள்ளதால் இந்த விலை அதிகரிப்பு இதன் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது என்றே தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Fascino 125 Fi Gets A Price Hike
Story first published: Friday, April 17, 2020, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X