யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய விபரங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

இந்தியாவின் 250சிசி பைக் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக யமஹா எஃப்இசட்25 பைக் இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் மற்றும் புதிய மாற்றங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த புதிய பிஎஸ்6 மாடலின் வருகையில் தாமதமடைந்து வருகிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

இந்த நிலையில், தனது இந்திய இணையதள பக்கத்தில் புதிய எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய இரண்டு மாடல்களின் முக்கிய விபரங்களை யமஹா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. லாக்டவுன் முடிந்த உடன் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

யமஹா எஃப்இசட்25 பைக் மாடல்களில் இருக்கும் 249சிசி ஏர்கூல்டு எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.8 பிஎஸ் பவரையும், 20.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் பவர் வெளிப்படுத்தும் திறனில் மாற்றங்கள் இல்லை.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

இந்த பைக் மாடல்களில் முன்புறத்தில் இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட ஹவுசிங் பொருத்தப்பட்டு இருக்கிறது. பாடி பேனல்களிலும் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எஞ்சினுக்கு பெல்லி பேன் பொருத்தப்பட்டு இருப்பதும் முக்கிய விஷயம்.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

இந்த பைக்கின் விலை உயர்ந்த எஃப்இசட்எஸ் 25 பைக் மாடலில் தங்க வண்ண அலாய் வீல்கள் பெரிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு, கைப்பிடி கவசங்கள் மற்றும் சில ஸ்டிக்கர் அலங்கார விஷயங்களுடன் தனித்துவம் பெறுகிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

அத்துடன், எஃப்இசட்எஸ்25 மாடலானது பேட்டினா க்ரீன், டார்க் மேட் புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளுடன் தங்க வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்படும். அடுத்து, ஒயிட் வெர்மில்லியன் வண்ணத் தேர்வில் கருப்பு வண்ண அலாய் வீல் கொடுக்கப்படும்.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

இந்த பைக்குகளில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு போட்டிருந்தால் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாத பாதுகாப்பு வசதி உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடல் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

யமஹாவின் எஃப்இசட்25 பைக் மாடல்கள் சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் பஜாஜ் டோமினார் 250 பைக் மாடல்களுடன் போட்டி போடுகிறது. லாக் டவுன் முடிந்த உடன் சந்தைக்கு வந்துவிடும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Japanese two wheeler maker, Yamaha has listed FZ 25 BS6 models on the company’s official website ahead of launch.
Story first published: Thursday, April 30, 2020, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X