பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எஃப்ஐ ஸ்கூட்டர் மாடல்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த தகவலினை இந்த செய்தியில் பார்போம்.

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

யமஹா நிறுவனம் இந்த இரு 125சிசி ஸ்கூட்டர் மாடல்களையும் இந்திய சந்தையில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இவற்றின் ஆரம்ப விலை அப்போது முறையே ரூ.66,730 மற்றும் ரூ.70,730-ஆக நிர்ணயிக்கபட்டது.

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

இந்த இரு ஸ்கூட்டர்களில் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மாடல் ட்ரம் & டிஸ்க் என இரு ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ட்ரம் வேரியண்ட்டின் விலை தான் மேற்கூறப்பட்ட ரூ.66,730 ஆகும். டிஸ்க் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை சற்று கூடுதலாக ரூ.69,730 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

MOST READ: புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா
Model Old BS6 Price New BS6 Price Price Hike
Ray ZR 125 Fi Drum Rs 66,730 Rs 67,530 Rs 800
Ray ZR 125 Fi Disc Rs 69,730 Rs 70,530 Rs 800
Ray ZR Street Rally 125 Fi Rs 70,730 Rs 71,530 Rs 800

இந்த நிலையில் தற்போது இந்த மூன்று விலை மதிப்பிலும் தலா ரூ.800 அதிகரிக்கப்பட்டுள்ளது. ட்ரம் & டிஸ்க் என இரு விதமான ட்ரிம்களில் விற்பனையாகுவது மட்டுமில்லாமல் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டரின் ட்ரம் வேரியண்ட் மெட்டாலிக் ப்ளாக் மற்றும் சியான் ப்ளூ என்ற இரு நிறத்தேர்வுகளையும் கொண்டுள்ளது.

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

அதேநேரம் இதன் டிஸ்க் வேரியண்ட் அதனை விட அதிகமாக டார்க் மேட் ப்ளூ, ரெட்டிஷ் யெல்லோ காக்டெயில், மேட் ரெட் மெட்டாலிக், மெட்டாலிக் ப்ளாக் மற்றும் சியான் ப்ளூ என்ற 5 விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MOST READ: பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மட்டுமல்ல... டாக்ஸிகளில் இன்னும் ஒரு மாற்றம்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

பிஎஸ்6 ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எஃப்ஐ ஸ்கூட்டரை பொறுத்தவரையில் இது ஒரே ஒரு வேரியண்ட் தேர்வை மட்டும் தான் கொண்டுள்ளது. இதற்கு ஸ்பார்கிள் க்ரீன் மற்றும் பர்பிலிஷ் ப்ளூ மெட்டாலிக் என்ற இரு நிற தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த இரு ஸ்கூட்டர் மாடல்களும் கவசம் பொருத்தப்பட்ட ஹெட்லைட் செட்அப், ஹேண்டில்பாருக்கு அருகில் எல்இடி டிஆர்எல், பெரிய அளவில் சவுகரியமான இருக்கைகள், இருக்கைக்கு அடியில் 21 லிட்டர் கொள்ளளவில் சேமிப்பிடம், சைடு ஸ்டாண்ட் போடப்பட்டால் தானாக நின்றுவிடும் என்ஜின் வசதி மற்றும் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவற்றை ஒரே மாதிரியாக கொண்டுள்ளன.

MOST READ: 5ஜி நெட், 3500 kWh பேட்டரி: இதுதான் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

இவை மட்டுமின்றி என்ஜின் அமைப்பையும் இந்த ஸ்கூட்டர்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. இதன்படி இவை இரண்டிலும் ஒரே 125சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 8.2 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்-ல் 9.7 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

இவ்வாறு பெரும்பான்மையான பாகங்களை ரே இசட்ஆர் 125 மாடலுடன் ஒத்து பெற்றிருந்தாலும் விலை வேறுபாட்டை நியாயப்படுத்தும் வகையில் ப்ளாக் பேட்டர்ன் டயர்கள், க்னக்கிள் பாதுகாப்பான்கள் மற்றும் சற்று வித்தியாசமான பக்கவாட்டு பேனல்களை ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

MOST READ: விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... வீடியோ!

பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 & ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஸ்கூட்டர்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய யமஹா

இந்த இரு ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமின்றி பிஎஸ்6 ஆர்15 வி3.0, பிஎஸ்6 எஃப்இசட்-எஃப்ஐ, பிஎஸ்6 எஃப்இசட்எஸ்-எஃப்ஐ மற்றும் பிஎஸ்6 எம்டி-15 போன்ற மோட்டார்சைக்கிள்களின் விலைகளையும் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தினை சமாளிக்கும் விதமாக யமஹா நிறுவனம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
BS6 Yamaha Ray ZR 125 Fi & Ray ZR Street Rally 125 Fi prices hiked Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X