ஆன்லைன் மூலம் எளிதாக டூ வீலர் வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

வாடிக்கையாளர் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில்கொண்டு, ஆன்லைன் மூலமாக இருசக்கர வாகனத்தை வாங்கும் வசதியை துவங்கி உள்ளது யமஹா நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

கொரோனா பிரச்னையால் வாகனங்களை வாங்கும் திட்டத்தை வாடிக்கையாளர்கள் பலர் தள்ளிப்போட்டு வருகின்றனர். பொருளாதார பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், நேரடியாக செல்லும்போது கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

இதனால், வாகன ஷோரூம்களுக்கு செல்வதற்கு மக்கள் அச்சத்துடன் தவிர்த்து வருகின்றனர். இதனை மனதில் வைத்து பல வாகன நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக வாகனங்களை வாங்குவதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றன.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

இந்த வரிசையில், தற்போது யமஹா நிறுவனமும் இணைந்துள்ளது. தனது பைக், ஸ்கூட்டர்களை வீட்டில் இருந்தே ஆன்லைனில் புக்கிங் செய்து வாங்குவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

வெறும் ஆன்லைனில் புக்கிங் செய்து வீட்டில் டெலிவிரி பெறும் வகையில் இல்லாமல், தாங்கள் வாங்க இருக்கும் யமஹா பைக் அல்லது ஸ்கூட்டரை முழுமையாக பார்த்து, சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளும் விதத்தில், விர்ச்சுவல் ஸ்டோர் என்ற இணையப்பக்கம் மூலமாக முழுமையாக பார்த்து வாங்கும் வகையில் தனது இணையதளத்தில் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

இந்த வசதி மூலமாக 360 டிகிரி கோணத்தில் யமஹா நிறுவனத்தின் அனைத்து பைக், ஸ்கூட்டர்களையும் பார்க்க முடியும். முதலில் வாங்க விரும்பும் மாடலை தேர்வு செய்து, அருகாமையிலுள்ள டீலரை தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

பின்னர், முன்பதிவு பக்கத்தில் அனைத்து சுய விபரங்களை பதிவு செய்து, ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்ட உடன், சம்பந்தப்பட்ட டீலரின் விற்பனை பிரதிநிதி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து கொடுத்து, வாகனத்தை டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவார்.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

இந்த புதிய வசதி மூலமாக வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களது புதிய யமஹா டூ வீலரை வாங்குவதற்கான வாய்ப்பை எளிதாக பெற முடியும். கடன் வசதி, டெலிவிரிப் பணிகள் உள்ளிட்டவற்றை டீலர் விற்பனை பிரதிநிதி மூலமாக பெற முடியும்.

ஆன்லைன் மூலம் டூ வீலர் வாங்குவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது யமஹா!

ஏற்கனவே இந்த ஆன்லைன் புக்கிங் திட்டம் பல முன்னணி கார், பைக் நிறுவனங்களுக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளதால், தங்களுக்கும் குறிப்பிடத்தக்க விற்பனையை இந்த புதிய ஆன்லைன் நடைமுறை மூலமாக பெற முடியும் என்று யமஹா நம்புகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha has introduces online two wheeler sales in India through its New virtual store website.
Story first published: Friday, August 14, 2020, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X