சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

பிரபல யமஹா நிறுவனம் சூப்பர் ஹூரோக்களின் ஸ்டைலில் எஃப்இசட் 25 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூப்பர் தோற்றத்திலான பைக்கை இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டிலேயே யமஹா அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

யமஹா நிறுவனம் புதிய எஃப்இசட் 25 மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பிரேசில் நாட்டிற்கான பிரத்யேக மாடல் ஆகும். யமஹா நிறுவனம் பிரேசில் நாட்டில் தனது கால் தடத்தைப் பதித்து 50ம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைக் கொண்டாடும் விதமாகவே புதிய மாடல் பைக்கை யமஹா அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

இதனை வழக்கமான எஃப்இசட் 25 பைக்காக அல்லாமல் சூப்பர் ஹீரோக்களின் வெர்ஷனில் அறிமுகம் செய்திருக்கின்றது யமஹா. அதாவது, மார்வல் தயாரிப்பின்கீழ் வெளி வந்த ஐயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தார், கேப்டைன் அமெரிக்கா மற்றும் பிளாக் பேந்தர் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்பட ஹூரோக்களின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

சூப்பர் ஹூரோக்களின் பிரத்யேக ஸ்டிக்கர்கள் மட்டுமின்றி தனித்துவமான அணிகலன்களையும் யமஹா இந்த பைக்குகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், புதிய கண்கவர் நிறத் தேர்வுகளையும் யமஹா இந்த பைக்குகளில் வழங்க இருக்கின்றது.

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

குளாஸ்ஸி நேவி ப்ளூ மற்றும் வெளிர் சிவப்பு உள்ளிட்ட புதிய நிறத் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து, சிறப்பு கூறுகளாக ஃபாக்ஸ் ஏர் இன்டேக் மற்றும் புதிய தோற்றத்திலான முன் பக்க ஃபெண்டர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

இதுதவிர வேறெந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் யமஹா எஃப்இசட் 25 பைக்கில் செய்யப்படவில்லை. ஆகையால், இப்பைக்கில் 249 சிசி திறன் கொண்ட ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.8 பிஎஸ் மற்றும் 20.1 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்... இளைஞர்களை கவர யமஹா அதிரடி...

இத்துடன், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மற்றும் எல்இடி இலுமினேஷன் உள்ளிட்ட சிறப்பு வசதிகளையும் இப்பைக்கில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சிறப்பு வாய்ந்த பைக் ரூ. 2.45 லட்சம் என்ற விலையில் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழக்கமான வேரியண்ட் ரூ. 2.37 லட்சம் என்ற விலையில் அங்கு விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launched Marvel Themed Special Edition FZ 25 In Brazil. Read In Tamil.
Story first published: Wednesday, November 25, 2020, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X