விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

புதிய எம்டி-15 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம்போல் பைக்கை அலங்கரித்துக் கொள்வதற்கு ஏதுவாக, பிரத்யேக கஸ்டமைஸ் தேர்வுகளை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் எம்டி-15 பைக் இந்திய இளைஞர்களின் முக்கியத் தேர்வுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பைக்கை தனித்துவப்படுத்தும் விதத்தில் ஏராளமான அலங்கார வேலைப்பாடுகளை பைக்கை வாங்கிய உடன் செய்கின்றனர்.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

ஸ்டிக்கர் அலங்காரம் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்துவதற்கு இந்த பைக்கின் வாடிக்கையாளர்கள் பலர் விரும்புகின்றனர். எனவே, இதனை மனதில் வைத்து புதிய கஸ்டமைஸ் தேர்வுகளை நேரடியாக வழங்குதாக யமஹா அறிவித்துள்ளது.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

இதன்படி, பைக்கிற்கு கூடுதல் ஸ்டிக்கர் அலங்கராம், விதவிதமான வண்ணத் தேர்வுகளில் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை யமஹா டீலர்கள் மூலமாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் 3 வண்ணத் தேர்வுகள் தவிர்த்து, 14 புதிய வண்ணத் தேர்வுகளில் இனி யமஹா எம்டி-15 பைக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. Customize Your Warrior (CYW) என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் எம்டி-15 பைக்கை டெலிவிரி பெறும்போதே, தங்களது விருப்பமான அலங்காரத்துடன் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இளைஞர்களை வெகுவாக கவரும் என்று கருதப்படுகிறது.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

புதிய யமஹா எம்டி-15 பைக்கில் இரட்டை எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் அமைப்பு, ஒற்றை இருக்கை, 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்சக்கரத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

புதிய யமஹா எம்டி-15 பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான அம்சங்கள் கொண்ட 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விதவிதமான வண்ணத் தேர்வுகள்... எம்டி15 பைக்கிற்கு கஸ்டமைஸ் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது யமஹா!

கஸ்டமைஸ் வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படும் எம்டி-15 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.43 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்டி-15 பைக்கை கஸ்டமைஸ் செய்து தருவதற்காக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஜனவரி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். எம்டி-15 பைக்கின் நியான் க்ரீன் என்ற கஸ்டமைஸ் வண்ணத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று யமஹா தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Motor India has launched a customization programme for its MT-15 buyers in the country. Called the "Customize Your Warrior (CYW)", the company is offering a total of 11 different combinations in colours to choose, while purchasing the MT-15.
Story first published: Monday, November 23, 2020, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X