ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

தொடர் ஊரடங்கால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய சரிவை கண்டுவரும் நிலையில் யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆஃப்-ரோடு வகை மோட்டார்சைக்கிளான டபிள்யூஆர் 155ஆர் பைக்கை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ட்யூல்-பர்பஸ் பைக்காக விளங்கும் டபிள்யூஆர் 155ஆர்-ஐ பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

சந்தையில் அதிகரித்து வருகின்ற ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிளிற்கான தேவையால் இந்தியாவில் நுழையும் இந்த அட்வென்ஜெர் ரக பைக் மார்க்கெட்டில் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 மற்றும் ராயல் எண்ட்பீல்டு பிஎஸ்6 பைக்குகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

எக்ஸ்ஷோரூமில் ரூ.1.5 லட்சத்தை விலையாக பெறலாம் என எதிர்பார்க்கப்படும் யமஹாவின் இந்த புதிய அட்வென்ஜெர் பைக்கில் யமஹா ஆர்15 பைக்கில் பொருத்தப்பட்டு வருகின்ற அதே என்ஜின் அமைப்பு தான் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் ஆர்15 பைக்கில் 18.6 பிஎச்பி பவரை வெளிப்படுத்தி வருகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

ஆனால் இந்த என்ஜின் புதிய டபிள்யூஆர் பைக்கில் அதிகப்பட்சமாக 16.7 பிஎச்பி பவரையும் 14.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த என்ஜினுடன் இணைக்கப்படவுள்ள 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் ஆஃப்-ரோடிற்கு ஏற்ற வகையில் ட்யூன் செய்யப்படவுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

அதேநேரம், தொலைத்தூர பயணங்களுக்கு உகந்த விதத்தில் சஸ்பென்ஷன், 245மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் 134 கிலோ எடையில் புதிய டபிள்யூஆர் 155ஆர் பைக் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் 21 மற்றும் 18 இன்ச் ஸ்போக் சக்கரங்களில் க்னோப்பி டயர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

இதன் சர்வதேச மாடல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்திய வெர்சனில் சிங்கிள்-சேனல் யூனிட்டை எதிர்பார்க்கலாம். இந்த அட்வென்ஜெர் பைக்கின் 888மிமீ உயர இருக்கைகள் (தரையில் இருந்து) மற்றும் 8.1 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளிட்டவை தான் இதன் டூரிங் தன்மையை சிறிது கெடுக்கின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

ஏனெனில் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 மாடல் இதனை விட 65மிமீ தாழ்வான ஓட்டுனர் இருக்கையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தோற்ற அமைப்பை பொறுத்த வரையில் யமஹா டபிள்யூஆர் 155ஆர் பைக் குறைந்தப்பட்ச போனி பேனல்கள், இருக்கைகளுக்கு அடியில் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் தொலைத்தூர பயண சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

இவற்றுடன் வழக்கமான தகவல்களுடன் எரிபொருள் அளவு மற்றும் கியர் பொஷிசன் இண்டிகேட்டர் போன்றவற்றையும் காட்ட முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த ஆஃப்-ரோடு பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் இந்திய வருகை குறித்த உடனுக்குடனான தகவல்களை அறிய நமது தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Might Have Some Adventurous Plans For India (Yamaha WR 155 R)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X