ரூ.85 லட்சம் விலையுள்ள பைக்கை 5லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்! உங்களாலும் முடியும்! ஆனால் எப்படி?

இளைஞர் ஒருவர் ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆடம்பர ரக பைக்கை வெறும் 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் என்ற பெயரில் ஆடம்பர ரக இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், அது விற்பனைச் செய்து வரும் உலக புகழ்பெற்ற மாடல்களில் பிஎம்டபிள்யூ எச்பி4 மாடலும் ஒன்று.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

இந்த மாடல் பைக்கிற்கு உலகளவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், இதன் விலையோ பல மடங்கு அதிகமாக உள்ளது.

அதாவது, அந்நிறுவனத்தின் சொகுசு கார்களின் விலைக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உச்சபட்ச விலையை அது பெற்றிருக்கின்றது. அதாவது, பிஎம்டபிள்யூ நிறுவனம் அந்த பைக்கிற்கு ரூ. 86.70 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

இது நாம் கனவிலும் வாங்க முடியாத மிக மிக மிக அதிக விலையாகும். ஆனால், இந்த பைக்கை இளைஞர் ஒருவர் வெறும் ரூ. 5 லட்சம் செலவில் வாங்கியிருக்கின்றார். இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம். அதேசமயம், இது எப்படி முடியும் என்ற கேள்வியும் உங்களிடத்தில் எழலாம்.. வாருங்கள் இதுகுறித்த தகவலைதான் தொடர்ந்து பார்க்கவிருக்கின்றோம்.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

பொதுவாக, வாகன மாடிஃபிகேஷன் மூலம் நம்மால் எத்தனை கோடி விலை மதிப்புள்ள வாகனங்களையும் குறைந்த தொகைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். இத்தகைய ஓர் முயற்சியில்தான் பல லட்சம் மதிப்புள்ள பைக்கை வெறும் 5 லட்ச ரூபாயில் இளைஞரால் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஒரு சிலருக்கு சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால், பலர் வரவேற்கும் செயல்பாடாக இருக்கின்றது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

ஏனென்றால், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பல இளைஞர்கள் இத்தகைய மாடிஃபிகேஷன் பைக்குகளைதான் அதிகம் விரும்புகின்றனர். இதனாலயே வாகன மாடிஃபிகேஷன் நிறுவனங்கள் மழை காலத்தில் தோன்றும் ஈசல் புற்றுகளைப் போல அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியிருகின்றது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

அந்தவகையில், தோன்றிய ஓர் நிறுவனத்தின் மூலமாகவே பல லட்சங்களுக்கு இணையான பைக்காக யமஹா ஆர்15 வி2 பைக்கை மாற்றப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த சம்பவம் இந்தியாவில் அரங்கேறவில்லை, வியட்நாமில் செய்யப்பட்டுள்ளது. வியட்நாமை மையமாகக் கொண்டு இயங்கும் லீட் மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த தரமான சம்பவத்திற்கு காரணமாக இருக்கின்றது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

இந்நிறுவனம், யமஹா ஆர்15 வி2 பைக்கை துளியளவும் சந்தேகமின்றி பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எச்பி4 பைக்காக மாற்றியிருக்கின்றது. இதற்காக, யமஹா பொருத்தியிருந்த அனைத்து பாகங்களையும், குறிப்பாக உடற்கூடு முதல் சைலென்சர் வரை அனைத்தையும் எச்பி4 பைக்கிற்கு இணையாக மாற்றியிருக்கின்றது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

ஆர்15 வி2 பைக்கின் தூக்கலான பின் பக்கம் மற்றும் கூரான முன்பகுதி இந்த தோற்ற மாற்றத்திற்கு ஒத்திசைத்துள்ளது. இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்தாலே உங்களுக்கு பல விஷயங்கள் உங்களுக்கு புரிந்துவிடும். மேலும், மாடிஃபிகேஷன் நிறுவனம் எத்தகைய உழைப்பை உருமாற்றத்திற்காக வழங்கியிருக்கின்றதை அறிய முடியும்.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

குறிப்பாக, பைக்கின் முகப்பு பகுதி உருமாற்றத்திற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏரோடைனமிக் அதாவது காற்றை பைக் கிழித்து செல்வதற்கான கூறான முகப்பு, வண்ண மயமாக மினிரும் வின்ட் ஸ்கிரீன்கள், ஹெட்லைட்டுகள் உள்ளிட்டவை எச்பி4 பைக்கின் தோற்றத்திற்காக ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்டு பொருத்ததப்பட்டுள்ளது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

இதேபோன்று, பக்கவாட்டு பகுதியிலும் ஒரிஜினல் உடற்கூறுகள் நீக்கப்பட்டு ஃபாவுக்ஸ் கார்பன் ஃபைபர் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், இந்த புதிய உடற்கூடுகளைத் தாங்கி நிற்பதற்காக இதன் ஃபிரேமில் லேசன மாற்றத்தையும் அந்நிறுவனம் செய்திருக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு பாங்களையும் எச்பி4 பைக்கிற்கு இணையாக அந்த நிறுவனம் பொருத்தியிருக்கின்றது.

ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பைக்கை 5 லட்ச ரூபாயில் சொந்தமாக்கிய இளைஞர்.. உங்களாலும் முடியும்.. ஆனால் எப்படி?

ஆனால், எஞ்ஜின் மட்டும் அந்த பைக்கில் இருந்ததையே அப்படியே பயன்படுத்தியிருக்கின்றது. ஆகையால், முன்பு காணப்பட்ட 149சிசி திறனுடைய எஞ்ஜினே தற்போதும் காட்சியளிக்கின்றது. இது அதிகபட்சமாக 17 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

அதேசமயம், உடற்கூடு மாற்றத்துடன் சைலென்சர் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளும் மாற்றப்பட்டிருக்கின்றன.

Source: Maxabout

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yamaha R15 V2 Modified Into BMW HP4. Read In Tamil.
Story first published: Monday, March 23, 2020, 19:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X