Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடு நடுங்க வைக்கும் காரியத்தை துணிச்சலாக செய்த இளைஞர்... வீடியோவ பாக்குறதுக்கே தனி துணிச்சல் வேணும்!
இளைஞரின் சாகச வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் பருவ மழை காலம் ஆரம்பித்துள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மும்பை நகரத்தின் தற்போதைய நிலை. தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் மழைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற அதேவேலையில், நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில், பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், அவரது யமஹா ஆர்3 பைக்குடன் கடப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பிறர் செய்ய தயங்கும் இந்த ஆபத்தான செயலை உள்ளூர் வாசி ஒருவரின் உதவியுடன் அந்த இளைஞர் செய்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

யமஹா ஆர்3 பைக் உரிமையாளரின் இந்த செயல் அவருக்கு மட்டுமின்றி, உதவிக்காக வந்தவரின் உயிருக்கும் பேராபத்தை விளைவிக்கக்கூடிய ஓர் செயலாகும். ஆனால், அதிர்ஷ்டவசமாக இருவரும் எந்தவொரு சிக்கலிலும் சிக்காமல் தப்பித்துள்ளனர். இதற்கு பைக்கின் அதி திறன் மற்றும் அது கடக்க உதவியபவர் மட்டுமே காரணம்.

இந்த பைக்கில் யமஹா நிறுவனம் 321 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்ட், பாரல்லல் ட்வின் எஞ்ஜினைப் பயன்படுத்துகின்றது. இது அதிகபட்சமாக 41 பிஎச்பியையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகையத் திறனை யமஹா ஆர்3 பைக் கொண்டிருப்பதனாலயே அதன் உரிமையாளர் மிகவும் துணிச்சலாக காட்டாற்று வெள்ளத்தைக் கடந்திருக்கின்றார்.

பெருக்கெடுத்து ஓடும் நீரில் செங்குத்தாக செல்வதே மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், இங்கோ அதிக வேகத்தில் பாய்ந்துக்கொண்டிருக்கும் நீர், பைக்கின் பக்கவாட்டு பகுதியைத் தாக்குகின்ற வகையில் அந்த இளைஞர் சென்றிருக்கின்றார். இதனாலயே பலர் இந்த வீடியோவை வெட வெடத்து பார்க்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. வீடியோவைப் பார்த்த நமக்கு மட்டுமில்லைங்க சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இவ்வாறே உணர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும், அங்கிருந்த ஒரு சிலர் யமஹா ஆர்3 பைக்கரை உற்சாகப்படுத்தும் விதமாக கோஷம் எழுப்பியிருக்கின்றனர். அவ்வாறு காட்டாற்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்க சென்றவர்களில் ஒருவரே இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் படமாக பிடித்து வைரலாக்கியிருக்கின்றார்.

இந்த சம்பவம் லடாக்கில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, லடாக்கின் பெரும்பாலான சாலைகள் கரடு, முரடானதாகவே காட்சியளிக்கின்றன. அதுமட்டுமின்றி, அங்கு பனிப் பாறைகள் உருகி வருவதால் சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக ஆற்றில் நீரோடுவதுண்டு. அதிலும், உச்சி வெயில் நேரங்களில் கூடுதலாக ஆற்றில் நீர் பெருக்கெடுப்பதுண்டு.

இதனால்தான் அப்பகுதி வாசிகள் பெருவாரியானோர் காலைப் பொழுதிலேயே ஆற்றைக் கடந்துவிடுகின்றனர். இதனடிப்படையிலேயே குறைந்தளவு வெள்ள நீர் வரும்போதே இந்த இருசக்கர வாகன ஓட்டி ஆற்றைக் கடந்திருக்கின்றார். அந்த நேரத்தில் அந்த ரைடர், அனைத்துவிதமான பாதுகாப்பு கவசங்களையும் அணிந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

ஒரு வேலை அதிக நீரோட்டத்தில் அவர் சருக்கி விழ நேர்ந்திருந்தாலும், அந்த ரைடிங் கியர்கள் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும். இருப்பினும், இதுபோன்று வெள்ள நீர் ஓடும் பாதையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது முட்டாள் தனமானது என வீடியோவைப் பார்த்த பலர் கமெண்ட் செய்திருக்கின்றனர். அதேசமயம், பைக்கரின் துணிச்சலுக்கு ஒரு சிலர் புகழாரம் சூட்டியும் வருகின்றனர். இதுகுறித்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

அந்த இளைஞர் பயன்படுத்திய யமஹா ஆர்3 பைக் புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. ட்யூவல் சேனல் ஏபிஎஸ் , டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகளுடன் விற்பனையில் இருந்த பைக், புதிய பிஎஸ்-6 உமிழ்வு விதியுடன் விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.