வைரலான வீடியோ! உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்! செய்தியை கேட்டு கொந்தளித்த மக்கள்!

இணையத்தில் வீடியோ வைரலானதை அடுத்து புதிய ஸ்கூட்டரை போலீஸார் வீடு தேடி வந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

விதிமீறல் வாதிகளுக்கு எதிராக போலீஸார் இரும்புக் கரம் தூக்க ஆரம்பித்திருக்கின்றனர். அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்து மற்றும் வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் களையெடுக்கும் விதமாக தீவிர கண்கானிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் தங்களின் கழுகு பார்வையைக் கொண்டு ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

ஏனெனில், இங்குதான் வாகனங்கள் சார்ந்து செய்யப்படும் விதிமீறல்கள் பற்றிய வீடியோ மற்றும் தகவல்கள் ஏராளமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. எனவேதான், போலீஸார் சாலையோர சிசிடிவிக்களுக்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்குகின்றனரோ, அதேபோன்று, வலை தளங்களில் உலா வரும் வீடியோக்களும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

அந்தவகையில், இணையத்தில் வைரலாகிய வீடியோவாலே புள்ளிங்கோ காளையர்கள் இருவர் தங்களது ஸ்கூட்டரை இழந்து நிற்கின்றனர். கேரள மாநிலம், கொள்ளம் பகுதியிலேயே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் கேரள அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி பேருந்துக்கு வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகின்றது.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

எனவேதான் கேரளா மோட்டார் வாகனத்துறையினர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவர்களிடத்தில் இருந்து யமஹா சிக்னஸ் ரே ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை இயக்கிச் சென்ற சிறுவனின் பெயர் உன்னிகிருஷ்ணன் என கண்டறியப்பட்டுள்ளது.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

இவரே தனது நண்பனுடன் ஸ்கூட்டரில் சென்றபோது அரசு பேருந்துக்கு வழிவிடாமல் மிகவும் பொறுமையாகச் சென்றவர் ஆவார். இதனால், பாதிக்கப்பட்ட பேருந்து பயணி ஒருவர் எடுத்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோதான் சிறுவர்களின்மீதான போலீஸாரின் நடவடிக்கைக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

சிறுவர்கள்மீது மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் போலீஸார் முன் வைத்திருக்கின்றனர். அதாவது, இருவரும் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றபோது ஹெல்மெட் அணியாதது மற்றும் நாடு ரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பிறருக்கு இடையூறு செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர். இதனடிப்படையிலேயே ஸ்கூட்டர் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கின்றன.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

இதுகுறித்து கொள்ளம் போலீஸார் கூறுகையில், "முன்னதாக பதிவெண்ணைக் கொண்டு ஆராய்ந்ததில், அந்த ஸ்கூட்டருடைய உரிமையாளரின் செல்போன் எண் கிடைத்தது. அதை வைத்து தொடர்பு கொண்டபோது, அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததே. எனவேதான், நேரடியாக வீட்டிற்கே சென்றோம். ஆனால், அங்கு ஸ்கூட்டர் இல்லை. தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் ஸ்கூட்டர் வெறொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தன. இதன் பின்னரே ஸ்கூட்டர் கைப் பற்றப்பட்டது" என்றனர்.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

யமஹா ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்த போலீஸார், அந்த வாகனத்தின் உரிமையாளருடைய ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இதேபோன்று பேருந்திற்கு வழிவிடாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிக்கு கேரளா மோட்டார் வாகனத்துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

இந்த நடவடிக்கையும் இணையத்தில் வைரலாகிய வீடியோவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது. இவ்வாறு, இணையம் வாயிலாக எழும்பும் புகார் மற்றும் வைரலாகும் விதிமீறல் வீடியோக்கள் ஆகியவற்றிற்கு மோட்டார் வாகனத்துறையினர் உடனடி பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே யமஹா சிக்னஸ் ரே ஸ்கூட்டர் பறிமுதல் சம்பவம் கேரளாவில் அரங்கேறியிருக்கின்றது. இதுபோன்று பெரிய உருவம் கொண்ட வாகனங்களை மறித்தவாறுபயணிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். பஸ் அல்லது டிரக்குகளை கட்டுப்படுத்துவது மக சிரமமான ஒன்று. ஆகையால்தான் கனரக வாகனங்களுக்கு முன் அல்லது பின் பக்கம் பயணிக்கும் கணிசமான இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் கூறப்படுகின்றது.

வைரலான வீடியோ... உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்... செய்தியை கேட்டு கொந்தளிக்கும் மக்கள்!

ஆனால், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து முன் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைக் கண்டிக்கும் விதமாகவே போலீஸார் தற்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறுவர் மற்றும் அவரது குடும்பத்தின் சிக்கலில் சிக்கியிருக்கின்றனர். அதேசமயம், சிறுவர்களின் இந்த அத்துமீறல் கேரள மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yamaha Scooter Deliberately Block KSRTC Bus. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X