200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

யமஹா நிறுவனம் டெனெரெ 700 ராலி எடிசன் மோட்டார்சைக்கிளை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ராலி தோற்றம் கொண்ட யமஹா பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

யமஹா நிறுவனம் புதிய டெனெரெ 700 ராலி எடிசனிற்கு டக்கார் ராலி நிறங்களுடன் ஏகப்பட்ட ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ளது. இதன்படி வெளிப்புறத்தில் இந்த பைக் 1980களில் வெளியான ராலி பைக்குகளின் பெயிண்ட் அமைப்பை கொண்டுள்ளது.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

இதை தவிர்த்து பார்த்தோமேயானல் பைக்கில் அப்கிரேட்டான ஸ்கிட் ப்ளேட்கள், ராலி இருக்கை, அக்ராபோவிக் எண்ட் கேன் மற்றும் சங்கிலி & ரேடியட்டருக்கு பாதுகாப்பான் உள்ளிட்டவை உள்ளன. மற்றப்படி டெனெரெ 700 பைக்கிற்கு வழக்கமாக வழங்கப்படும் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

இதனால் அதே 689சிசி, இணையான-இரட்டை என்ஜினை தான் இந்த ராலி எடிசன் பைக் மாடலும் பெற்றுள்ளது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 72.4 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 68 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

200 கிலோவிற்கு அதிகமான எடையுடன் அட்வென்ஜெர் பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக விளங்கும் இந்த புதிய எடிசனிலும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான யமஹா டெனெரெ 700 பைக்கில் வழங்கப்படும் ஒன்றாகும். இதனை ரைடிங்கிற்கு தேவைப்பட்டால் முழுவதுமாக அணைத்து வைக்கவும் முடியும்.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

இதை தவிர்த்து இந்த ராலி பைக்கில் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்கள் போன்ற மற்ற எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் எதுவும் இல்லை. மாறாக, புதியதாக என்ஜின் மற்றும் பைக்கின் முன்புற தாழ்வான பகுதிகளை பாதுகாக்கும் வகையில் 4மிமீ தடிமனான பேஷ் தட்டை தான் பெற்றுள்ளது.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

அதேபோல் பைக்கின் ரேடியேட்டரை காக்க புதியதாக கருப்பு நிறத்தில் அலுமினியம் ரேடியேட்டர் பாதுகாப்பானும், சவலான பயணிகளின்போது சங்கிலியை பாதுகாக்க அலுமினியம் லேசர்-கட் செயின் ப்ரோடக்டரும் உள்ளன. இதன் இருக்கை ஸ்டாக் மாடலில் உள்ளதை காட்டிலும் 20மிமீ அதிகமாக 895மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

200 கிலோவில் யமஹாவின் புதிய டெனெரே 700 ராலி எடிசன் ஐரோப்பாவில் அறிமுகமானது...

இந்த இருக்கை அமைப்பு நிச்சயம் ரைடர்களுக்கு சவாலாக அமையலாம். சக்கர அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாக் பைக்கில் உள்ள 21 இன்ச் மற்றும் 18 இன்ச் வயர் ஸ்போக்டு சக்கரங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூலை மாதத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் டீலர்ஷிப்களை சென்றடையவுள்ள புதிய டெனெரெ 700 ராலி எடிசனின் இந்திய வருகை குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Tenere 700 Rally Edition introduced in Europe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X