Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 9 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்டைலில் ஆர்15 பைக்கையே தோற்கடித்துவிடும், யமஹாவின் 2021 ஆர்125 மோட்டார்சைக்கிள்!!
சர்வதேச சந்தைக்கான 2021 ஒய்இசட்எஃப்-ஆர்125 பைக்கை பற்றிய விபரங்களை யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்டாக, முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட இந்த யமஹா மோட்டார்சைக்கிளில் இரு புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இந்த இரு நிறங்களில் ரேசிங் நீலமும் ஒன்று.

இந்த பெயிண்ட் தேர்வில் முன் ஃபெண்டர், பின்பக்க வால்பகுதி மற்றும் ‘ஆர்125' லோகோ வரும் இடங்கள் உள்ளிட்டவை க்ரே நிறத்தில் வழங்கப்படும். இந்த ரேசிங் நீல நிறம் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்1 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்6 பைக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

புதியதாக இந்த 125சிசி பைக்கிற்கு வழங்கப்படவுள்ள மற்றொரு நிறத்தேர்வான கருப்பில், பைக்கின் முன்பக்கத்திலும் பின் வால்பகுதியிலும் சிறிது வெள்ளை நிறம் வழங்கப்படும். அதேநேரம் இந்த கருப்பு நிற பெயிண்ட் தேர்வில் பைக்கின் முன்பக்க ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் வழங்கப்படவுள்ளன.

இந்த புதிய நிறங்களுடன் லிவர் பாதுகாப்பானும் 2021 ஆர்125 பைக்கிற்கு நிலையாக வழங்கப்படவுள்ளது. யமஹா ஆர்125 பைக்கில் 124சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் யூரோ-5க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து பைக்கின் மற்ற சஸ்பென்ஷன், ப்ரேக் உள்ளிட்ட பாகங்கள் எதிலும் மாற்றமும் இல்லை. இந்த 2020ஆம் வருட இறுதிக்குள் சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகவுள்ள இந்த 2021 யமஹா பைக் தற்போதைக்கு இந்தியாவிற்கு வராது. ஏனெனில் இந்திய சந்தையில் இதன் இடத்தை தற்சமயம் யமஹா ஆர்15 வி3 பைக் நிரப்பி வருகிறது.

ரூ.1.49 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ள யமஹா ஆர்15 பைக்கில் அதிகப்பட்சமாக 18.37 பிஎச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 155சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இளைஞர்களின் பேராதரவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பைக்கிற்கு தண்டர் க்ரே, ரேசிங் நீலம், டார்க்நைட் என்ற மூன்று நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.