இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

யமஹா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மாடலான ட்யூல்-ஸ்போர்ட் டபிள்யூஆர் 155ஆர் பைக் சில தினங்களுக்கு முன் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த 155சிசி பைக் டைனோ சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு விதமான பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் அதிகப்பட்சமாக 151 kmph என்ற வேகத்தை எட்டுவதை இந்த வீடியோ ஹைலைட்டாக சுட்டி காட்டுகிறது. இந்த டைனோ சோதனையில் டபிள்யூஆர் 155ஆர் பைக் எந்தவொரு மாடிஃபிகேஷன் மாற்றமும் இல்லாமல் முற்றிலும் ஸ்டாக் நிலையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

இதன் ஒடோமீட்டர் 1000 கிமீ-க்கும் அதிகமாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ள இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்..

இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

இந்த கியர்பாக்ஸ் மூலமாக யமஹா டபிள்யூஆர் 155ஆர் பைக் முதல் கியரில் அதிகப்பட்சமாக 42 kmph வேகத்தையும், இரண்டாவது கியரில் 65 kmph-ஐயும், மூன்றாவது கியரில் 91 kmph-ஐயும், நான்காவது கியரில் 110 kmph-ஐயும், ஐந்தாவது கியரில் 132 kmph-ஐயும், ஆறாவது கியரில் 151 kmph வேகத்தையும் அடைவதையும் இந்த வீடியோவின் மூலமாக அறிய முடிகிறது.

MOST READ: கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

இருப்பினும் இந்த பைக் 5வது கியரின் 131 kmph வேகத்தில் இருந்து 6வது கியர் மூலமாக 151 kmph வேகத்தை அடைய சில வினாடிகளை எடுத்து கொள்கிறது. எப்படியிருந்தாலும் ட்யூல் ஸ்போர்ட் ரக பைக்கான இது அதிகப்பட்சமாக 151 kmph வேகத்தில் இயங்குவது உண்மையில் பாராட்டத்தக்கது.

இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

என்ஜின் அமைப்பை பார்த்தோமேயானால், புதிய டபிள்யூஆர் 155ஆர் பைக்கில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின், யமஹாவின் நிலையற்ற வால்வு இயக்கத்துடன் (VVA) பொருத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆர்15 வி3 பைக்கிலும் வழங்கப்பட்டிருந்த இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 16.7 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 14.3 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும்.

MOST READ: இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளோம். சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிற்கு இந்த பைக் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் 240மிமீ பெடல் டிஸ்க்கையும், பின்பிறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்ரீ-லோடு உடன் லிங்க்-டைப் மோனோக்ராஸ் எரிவாயு ஷாக் அப்சார்ப்ஸ் மற்றும் 220 மிமீ பெடல் டிஸ்க்கையும் கொண்டுள்ளது.

MOST READ: 'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி..

இந்தியாவின் எதிர்கால பைக் யமஹா டபிள்யூஆர் 155ஆர்... இதன் அதிகப்பட்ச வேகம் என்ன தெரியுமா..?

முன்புறத்தில் 21 இன்ச்சிலும், பின்புறத்தில் 18 இன்ச்சிலும் அலாய் சக்கரங்களையும் கொண்டுள்ள இந்த புதிய பைக்கின் ஒவ்வொரு சக்கரத்திலும் ட்யூல்-பர்பஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் இத்தகைய மோட்டார்சைக்கிளுக்கு எவ்வாறான தேவை உள்ளது என்பதை ஆராய்ந்து வருவதால் புதிய டபிள்யூஆர் 155ஆர் பைக்கை விரைவில் இந்திய சந்தையில் பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha WR 155R reaches a top speed of 151 km/h on a dyno [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X