அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய ஒரு அட்டகாசமான பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்பங்களை கலந்து கட்டியதாக உருவாக்கப்பட்டு வரும் ரெட்ரோ ஸ்டைல் பைக் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு, ஜாவா பைக்குகளுக்கு இருந்து வரவேற்பு இதற்கு சாட்சியாக இருக்கிறது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

எனவே, ரெட்ரோ க்ளாஸிக் ரகத்திலான பாரம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்ட பைக் மாடல்களை கொண்டு வருவதில் அனைத்து நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. பெனெல்லி நிறுவனம் ஏற்கனவே இம்பீரியல் 400 பைக்கை கொண்டு வந்த நிலையில், அடுத்து ஹோண்டாவும் ரெட்ரோ க்ளாஸிக் ஸ்டைல் பைக் மாடலை கொண்டு வர திட்டம் போட்டுள்ளது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

இந்த வரிசையில், யமஹா நிறுவனமும் விரைவில் இணைய உள்ளதாக காடிவாடி தள செய்தி தெரிவிக்கிறது. யமஹா நிறுவனத்தின் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் மாடலானது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

பல வெளிநாடுகளில் ஸ்போர்ட் ஹேரிடேஜ் என்ற பாரம்பரிய குடும்ப வரிசையில், எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் விற்பனையில் இருந்து வருகிறது. மேலும், யமஹாவின் குறைவான விலை ஸ்போர்ட் ஹேரிடேஜ் குடும்ப வரிசை மாடலாகவும் இருந்து வருகிறது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

வட்ட வடிவிலான ஹெட்லைட், பழமையை பரைசாற்றும் விதத்திலான பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, ஒற்றை டயல் அமைப்புடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சிங்கிள் பீஸ் சீட் உள்ளிட்டவை இதனை பழைய மாடலுக்கு உரித்தான மாடலாக காட்டுகிறது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

டிசைன் பாரம்பரியத்தை போற்றிலும், தொழில்நுட்பங்களில் இன்றைய காலகட்ட வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. குறிப்பாக, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பார்ப்பதற்கு பழமையை போற்றுவதாக இருந்தாலும், இதில் டிஜிட்டல் டிரிப் மீட்டர், எரிபொருள் அளவை காட்டும் வசதி, ஸ்பீடோமீட்டர், கியர் இண்டிகேட்டர், ஓடிய தூரத்தை காட்டும் ஓடோமீட்டர் ஆகிய அனைத்தும் உள்ளன.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆர்15 V3.0 மற்றும் எம்டி-15 பைக் மாடல்களில் பயன்படுத்தப்படும் அதே 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் இடம்பெறும். இந்த எஞ்சின் 18.9 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் அசிஸ்ட் க்ளஸ்ட்ச் வசதியும் உள்ளது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

இந்த பைக்கில் ஸ்டீல்-டெல்டாபாக்ஸ் ஃப்ரேம் அமைப்புடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. அதேபோன்று முன்புறத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

அடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா?

இந்த பைக்கின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுவதற்கு முக்கிய காரணம், அசத்தும் டிசைன் அமைப்புடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆர்15 வி3.0 மற்றும் எம்டி-15 பைக் மாடல்களைவிட விலை குறைவாக நிலைநிறுத்தப்படும் என்ற தகவல்தான். ரூ.1.40 லட்சம் விலையில் இந்த பைக் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
The Yamaha XSR 155 is a retro-looking motorcycle that was launched in the international market back in 2019. The company is expected to launch the XSR 155 in the Indian market sometime during the end of this year.
Story first published: Tuesday, June 16, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X