தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

யமஹா நிறுவனம் தண்ணீரில் ஓடும் பைக்கைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

யமஹா நிறுவனத்தை பற்றிய சிறப்பு தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியதால் அதன் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திகைத்துள்ளனர். மிகவும் ஸ்டைலான, அதி-திறன் மிக்க ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு களமிறக்கி வரும் இந்நிறுவனம், விரைவில் நீரில் பயணிக்கக்கூடிய இருசக்கர வாகனத்தைத் தயாரிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலினாலயே அவர்கள் சந்தோஷத்தில் திகைத்திருக்கின்றனர்.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

இந்த பிரத்யேக மாடலை எக்ஸ்டி500 மாடலின் உருவத்தில் அந்நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 1975ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த மாடலே எக்ஸ்டி 500. இதைதான் நவீன காலத்திற்கு ஏற்ப புதிய தோற்றம் மற்றும் தொழில்நுட்பங்களுடன் யமஹா மீண்டும் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

சமீப காலமாகவே யமஹா நிறுவனம், அதன் பழைய வாகனங்களின் பெயரில் நவீன மாடல்களை அறிமுகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதனால்தான், பழைய மாடலின் பெயரில் புதிய இருசக்கர வாகனங்கள் அறிமுகமாவது, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

இருப்பினும், மாடர்ன் பைக்காக உருவாகும் புதிய மாடல்களில் இடம்பெறும் வசதி பிரம்மிப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்ற வகையில் இருக்கின்றது. குறிப்பாக, புதிய உருவம், எஞ்ஜின் திறன் மற்றும் அதில் இடம் பெறும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவை ஆச்சரியத்திற்கே ஆச்சரியத்தை வழங்கம் வகையில் அமைகின்றது. அம்மாதிரியான வடிவமைப்பிலேயே எக்ஸ்டி500 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

இந்த பைக்கிற்கான புதிய வடிவத்தை ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த புகழ்வாய்ந்த வாகன வடிவமைப்பாளரான மாக்சிம் லெபெப்வ்ரே வழங்கியிருக்கின்றார். 1975 எக்ஸ்டி500 மாடலை மறு தழுவல் செய்யும் வகையிலேயே அதற்கான புதிய வடிவத்தை அவர் வழங்கியிருக்கின்றார். இதனால், அப்பைக் புதிய அவதாரத்தைப் பெற்றிருக்கின்றது.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

யமஹாவின் இந்த கான்செப்ட் மாடலுக்கு எக்ஸ்டி 500 மட்டுமின்றி மற்றுமொரு பெயரும் வைக்கப்பட்டுள்ளது. எச்2ஓ என்ற புனைப்பெயரிலும் அதை அழைக்கப்படுகின்றது. எச்2ஓ என்பது நீரைக் குறிக்கும் அறிவியல் பெயராகும். இந்த பைக் தண்ணீரைக் கொண்டு இயங்கும் என்பதனாலயே இப்பெயரை அந்நிறுவனம் வைத்திருக்கின்றது. ஆம், புதிய எக்ஸ்டி500 இயங்க ஹைட்ரஜனோ அல்லது வேறு எந்த எரிபொருளும் தேவைப்படாது.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

வெறும் தண்ணீர் மட்டுமே போதும் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப பிரத்யேக மோட்டாரே தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் அடைக்கப்பட்ட லூப் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் வழியாக தண்ணீர் அதிக அழுத்தப்படும். அப்போது கிடைக்கும் ஆற்றல், இயங்கு சக்தியாக மாற்றப்பட்டு நேரடியாக பைக்கின் பின் வீலுக்கு வழங்கப்படுகின்றது.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

இதனால், வழக்கமான எரிபொருள் இயங்குவதைப் போன்றே அப்பைக்கும் இயங்கும். இந்த பைக் தற்போது கான்செப்ட் (மாதிரி) மாடலாகவே உருவாக்கப்பட்டு வருவதால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அது வெளியிடவில்லை. ஆனால், விரைவில் இது உற்பத்தி மாடலாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

இந்த பைக்கிற்கு பிஎம்டபிள்யூ கே1300ஆர் பைக்கின் ஸ்டைல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, நேக்கட் ஸ்போர்ட்ஸ் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது விற்பனையில் இருக்கும் பிற பைக்குகளைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை இதற்கு வழங்கும் விதமாக அதி நவீன சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட உள்ளன.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

இது தவிர, இது ஒற்றை பக்க ஸ்விங்கார்ம் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பையும் கொண்டுள்ளது. மேலும், வித்தியாசமான கைப்பிடிகள், சிறிய எல்இடி ஹெட்லைட்டை உள்ளிட்டவையும் அதில் பொருத்தப்பட இருக்கின்றது. இவையனைத்தும் சேர்ந்து மோட்டார் சைக்கிளுக்கு டர்ட் பைக் போன்ற மெல்லிய தோற்றத்தை வழங்குகின்றது.

தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!

யமஹா நிறுவனம், எக்ஸ்டி500 மாடலை 1975ம் ஆண்டில் விற்பனைக்கு வழங்கும்போது 499சிசி திறனுடைய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினில் வழங்கியது. இது, 26.5 பிஎஸ் மற்றும் 38 என்எம் டார்க்கை வேளியேற்றும் திறனைக் கொண்டது. ஆனால், தற்போதைய மாடலில் தண்ணீரில் இயங்கும் எந்திரம் இடம்பெறவிருப்பதால் அதில் என்னமாதிரியான திறன் வெளிப்பாடு கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும், அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha XT 500 H2O Concept Runs On Water. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X