யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

யமஹா நிறுவனத்திற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனாவைக் கண்டு இந்திய இளைஞர்கள் கடுப்பில் மூழ்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் மட்டுமல்ல உலக மக்கள் அனைவரின் காதுகளும் எதிர்பார்க்கின்ற ஒரே ஒரு வார்த்தையாக கொரோனாவின் அழிவு பற்றியது இருக்கின்றது. இந்திய இளைஞர்களும் இந்த வைரசின் அழிவையே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

ஏனென்றால் இந்த வைரஸ் பரவலின் காரணமாக இந்தியாவில் பல புதிய வாகனங்களின் அறிமுகம் தள்ளிப்போய் கொண்டே உள்ளது. அதேபோன்று, யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் நான்கு புத்தம் புதிய மாடல் பைக்குகளின் அறிமுகமும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இதில், எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலும் அடங்கும். இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் வாகனங்களில் இந்த மோட்டார்சைக்கிளும் ஒன்று. இதன் தனித்துவமான தோற்றம் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவேதான், கொரோனா வைரசின் அழிவுகுறித்த தகவலை எதிர்நோக்கி இளைஞர்கள் தங்களின் காதுகளை வைத்திருக்கின்றனர்.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

எக்ஸ்எஸ்ஆர் 155 மாடல் மட்டுமின்றி வேறுசில பிரபல மாடல்களும் இந்தியாவில் களமிறக்கப்படுவதற்காக தயாராக இருக்கின்றன.

அந்தவகையில், எந்தெந்த மாடல்கள் அறிமுகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம்.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

என்மேக்ஸ் 155 (NMax 155)

இந்தோனேசியாவில் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர்தான் என்மேக்ஸ் 155. இதைதான் இந்தியாவில் களமிறக்குவதற்காக யமஹா காத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டராகும்.

இந்த ஸ்கூட்டரில் 155 சிசி திறன் கொண்ட விவிஏ திறன் கொண்ட மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எஞ்ஜின்தான் ஆர்15 வி3.0 பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், இதன் திறன் மட்டும் மாறுப்பட்டு காணப்படும்.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

அதாவது, 15.36 பிஎஸ் மற்றும் 13.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த திறனுடன் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஒய் கன்னெக்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது, இந்திய ஸ்பெக் மாடலில் இடம்பெறுமா என்பது சந்தேகம்தான்.

தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்த்தால் இந்த ஸ்கூட்டர் 2021ம் ஆண்டில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்3

யமஹா நிறுவனம் இந்தியாவில் களமிறக்க இருக்கும் இருசக்கர வாகனத்தில் ஒய்இசட்எஃப் ஆர்3 மோட்டார்சைக்கிளும் ஒன்று. இது புதிய பிஎஸ்-6 தர எஞ்ஜின் அப்கிரேடுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இது இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அது மீண்டும் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

ஆனால், இப்போது புதிய தலைமுறை வாகனமாக அது களமிறங்க இருக்கின்றது. இந்த பைக்கில் 321 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி இன்லைன், ட்வின் சிலிண்டர், ப்யூவல் இன்ஜெக்டட் மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 42 பிஎஸ் மற்றும் 30 என்எம் டார்க்கை வெளிப்படுத்த உதவும். இதன் அறிமுகமும் வருகின்ற 2021ம் ஆண்டிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

250 சிசி திறனுடைய அட்வென்சர் பைக்

இந்தியாவில் அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் விலைகுறைந்த அட்வென்சர் ரக பைக்கை களமிறக்க யமஹா நிறுவனம் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த மாடலின் பெயர் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை அது இன்னும் வெளியிடவில்லை.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இருப்பினும், அ்து 250 சிசி திறன் கொண்ட பைக்காக இருக்கும் என சூசமாக தெரிவித்துள்ளது. இந்த பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் களமிறக்கப்பட உள்ளது. இந்த பைக்கும் 2021ம் ஆண்டிற்கு பின்னரே எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இதில் பிஎஸ்-6 தரம் கொண்ட 249சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, 2 வால்வ், எஸ்ஓஎச்சி, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எஞ்ஜின் எஃப்இசட் 25 மாடலிலும் யமஹா பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 20.8 பிஎஸ் பவரையும், 20.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் தன்மைக் கொண்டது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

எக்ஸ்எஸ்ஆர்155

இந்தியாவில் மிக மிக அதிக ஆவலைத் தூண்டி வரும் பைக்காக யமஹாவின் இந்த எக்ஸ்எஸ்ஆர் 155 உள்ளது. இது தோற்றத்திலும், திறனிலும் மிகவும் வித்தியாசமான ஓர் மாடலாக இருக்கிறது. இதன்காரணத்தினாலயே இந்திய இளைஞர்கள் இந்த பைக்கின் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டுள்ளனர். இந்த பைக் கடந்த ஆண்டே தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இதைத்தொடர்ந்து, சில தென் ஆசிய நாடுகளிலும் அது அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்தே தற்போது இந்தியாவிலும் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கை களமிறக்க யமஹா காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த பைக்கானது ராயல் என்பீல்டு மற்றும் ஜாவா ஆகிய நிறுவனங்களின் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் கிளாசியான தோற்றத்தில் தயாராகி இருக்கின்றது.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இதன் தோற்றம் கிளாசியாக காட்சியளித்தாலும் அதில் காணப்படும் அம்சமானது அதி நவீன தொழில்நுட்பத்திற்கு இணையானதாக உள்ளது. இதுபோன்ற ஒரு சில காரணங்கள் இளைஞர்கள் மத்தியில் ஆவலைத் தூண்ட காரணமாக அமைந்துள்ளது. அந்தவகையில், வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட், சிங்கிள் பீஸ் இருக்கை அமைப்பு, ரெட்ரோ கிளாசிக் தோற்றம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

யமஹாவிற்கு தடை கல்லாய் நிற்கும் கொரோனா... கடுப்பில் இருக்கும் இந்திய இளைஞர்கள்... ஏன் தெரியுமா?

இதுமட்டுமின்றி, எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் பின் பக்கத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த பைக்கில் 155சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, 4 ஸ்ட்ரோக், எஸ்ஓஎச்சி, 4 வால்வ், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 18.6 பிஎஸ் மற்றும் 14.1 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha's Most Awaited 4 New Launch In India. Read In Tamil.
Story first published: Sunday, June 21, 2020, 9:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X