பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

பைக்கின் வீலை பஞ்சர் போட்டதற்கு மெக்கானிக் ஒருவர் இளைஞரிடத்தில் ரூ. 6,500 கட்டணமாக வசூலித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

கார் அல்லது இருசக்கர வாகனம் என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. அனைத்து விதமான பணிகளுக்கும் இவை இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் அநேகரிடத்தில் குறைந்தபட்சம் ஒரு இருசக்கர வாகனமாவது பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அவ்வாறு வாகனங்களைப் பயன்படுத்தி வரும் அனைவரும் அதன் வீல் பஞ்சராகி இருப்பதை எதிர்கொண்டிருப்பர்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

பொதுவாக இந்த பிரச்னையைச் சந்திக்கும் காரின் உரிமையாளர் தன்னிடம் இருக்கும் ஸ்டெப்னியைப் பயன்படுத்தி அதனை நிவர்த்தி செய்துவிடுவார். ஆனால், இருசக்கர வாகனத்தில் ஸ்டெப்னி போன்ற வசதி இல்லாத காரணத்தால் அவர் நிச்சயம் மெக்கானிக் கடைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற சூழல் நிலவுகின்றது. அதேசமயம், தற்போது 99 சதவீத இருசக்கர வாகனங்களில் ட்யூப் லெஸ் டயர்களேக் காணப்படுகின்றன.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

ஆகையால், வீலை கழட்டாமலே மெக்கானிக்குகளால் மிக சுலபமாக பஞ்சர் போட முடியும். ஆனால், ட்யூப் உள்ள இருசக்கர வாகனத்தில் கடின உழைப்பை அவர்கள் பேட வேண்டியிருக்கின்றது. வீலை கழட்டி, ட்யூபில் எங்கு ஓட்டை விழுந்துள்ளது என தேடி கண்டுபிடித்து, பின்னரே அதை சரி செய்கின்றனர். இதற்கு அதிக நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

ஆனால், ட்யூப் லெஸ் டயர்களைப் பஞ்சர் போடுவதற்கு பெரியளவில் நேரமும் எடுத்துக் கொள்ளாது. மேலும், செலவும் மிக மிக குறைவு. இருப்பினும் ஒரு சில இடங்களில் ரூ. 100 முதல் 150 ரூபாய் வரை மெக்கானிக்குகள் சிலர் கட்டணமாக வசூலிக்கின்றனர். குறிப்பாக நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் சாலையோர மெக்கானிக்குள் பலரே இந்த முறைகேட்டில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

இந்த அதிகபட்ச கட்டணத்தைக் காட்டிலும் உச்சபட்ச பகல் கொள்ளையில் ஓர் மெக்கானிக் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவே இதில் சிக்கியிருக்கின்றார். தன்னுடைய ஒற்றை வீலில் ஏற்பட்ட சில பஞ்சர்களைப் போக்குவதற்காக 6,500 ரூபாயை அந்த இளைஞர் கட்டணமாக வழங்கியிருக்கின்றார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

மும்பையின் தானே பகுதியில் வசித்து வருபவர் சிரக் நிம்பரே. இவர்தான் புதிய டயரின் விலையைக் காட்டிலும் கூடுதல் தொகையை பஞ்சர் கட்டணமாக செலுத்தியவர். சிரக் நிம்பரே தானேவில் வசித்து வந்தாலும், இவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும்பாலானோர் புனேவில் வசித்து வருகின்றனர். இவர்களைக் காணவே சிரக் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

அப்போதுதான் பைக்கின் பின் பக்க டயர் பஞ்சராகியிருக்கின்றது. ஆனால், இதை அறியாமல் நீண்ட தூரம் சென்ற சிரக், தனது பைக்கில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதை உணர்ந்து, ஆராய்ந்தார். அப்போதுதான் பைக் பஞ்சரானதையே தெரிந்துக்கொண்டர். இதையடுத்து நேரம் கடக்க வேண்டாம் என எண்ணிய அவர், சாலையோர மெக்கானிக் கடை ஒன்றில் பஞ்சரை நீக்குவதற்காக விட்டுள்ளார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

அந்த மெக்கானிக், டயரில் அதிகம் பஞ்சர் ஏற்பட்டுள்ளது. டயரை மாற்றிவிடுங்கள் என பரிந்துரைத்துள்ளார். அதற்கு ரூ. 8,500 வரை செலவாகும் என கூறியிருக்கின்றார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், அதெல்லாம் வேண்டாம் பஞ்சரை மட்டும் சரி பாருங்கள் என கூறியிருக்கின்றார். சிறிது நேரம் கழித்து பஞ்சர் போட்டதற்கான பில்லாக ரூ. 9,500ஐ இளைஞரிடத்தில் மெக்கானிக் கொடுத்துள்ளார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

சுமார் 60க்கும் மேற்பட்ட பஞ்சர் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை சரி செய்தற்காகவே இந்த கட்டணம் என கூறியிருக்கின்றார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன இளைஞர், நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அந்த மெக்கானிக் விட்டுக் கொடுக்கவே இல்லை. தான் அனைத்து உபகரணங்களையும் இந்த பைக்கிற்காகவே வெளியில் இருந்தே வாங்கி வந்ததாகவும், கூறிய பணத்தைக் கொடுங்கள் என மிரட்டும் தோணியில் கேட்டுள்ளார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

பின்னர் நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ரூ. 6,500ஐ பெற அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இதுவும் உச்சபட்ச தொகை என்பதால் பைக்கின் உரிமையாளர், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றார். அப்போது அங்கிருந்த இருவர் மெக்கானிக்கிற்கு சாதகமாக பேசி மிரட்ட ஆரம்பித்திருக்கின்றனர். சூழ்நிலை மோசமாக மாறுவதை உணர்ந்த சிரக், இனியும் இங்கு இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என நினைத்து ரூ. 6,500ஐ செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் அந்த இளைஞர் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகின்றது. தனக்கிருந்த வேலை மற்றும் அங்கு நிலவிய மோசமான சூழல் காரணமாக அங்கிருந்து உடனடியாக புறப்பட வேண்டியிருந்த காரணத்தினால் எந்த புகாரையும் தான் வழங்கவில்லை என புனே மிர்ரர் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் சிரக் சிம்பரே கூறியிருக்கின்றார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

இதுகுறித்து தலேகான் காவல்நிலைய துணை ஆய்வாளர் கூறியதாவது, "இளைஞருக்கு நேர்ந்த சம்பவம்குறித்த தகவல் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த இளைஞர் இதுவரை எந்த புகாரையும் வழங்கவில்லை. இதுமாதிரியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன் வந்து புகார் வழங்கினால் மட்டுமே சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும், மோசடி செய்த மெக்கானிக்கைப் பற்றி விசாரிக்குமாறு அப்பகுதி காவலர்களிடத்தில் கூறப்பட்டுள்ளது" என்றார்.

பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க!

புதிய டயர் வாங்கியிருந்தால்கூட இந்த உச்சபட்ச தொகை செலவாகியிருக்காது என இணைய வாசிகள் பலர் சம்பவத்தைக் கேட்டு ஆதங்கப்பட்டு வருகின்றனர். மேலும், இதுபோன்று பகல் கொள்ளையில் ஈடுபடுபவர்களைக் கடுமையாக கண்டிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்களும், வாகன ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youngster Forced To Pay Rs.6,500 For Fixing Motorcycle Tyre Puncture. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X