கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

கேரளாவில் ஒரே நாளில் சுமார் 100 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு ஆச்சிரியப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனம், தற்சமயம் இளைஞர்கள் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக உள்ள ஹிமாலயன் பைக்கை கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. ஆஃப்-ரோடு, நார்மல்-ரோடு என இரு விதமான சாலைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த பைக் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

அதிலும் கேரள இளைஞர்கள் ராயல் என்பீல்டு தயாரிப்புகள் என்றாலே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக சமீபத்தில் ஒரே நாளில் 100 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள் கேரளாவில் வாடிக்கையாளர்களால் டெலிவிரி எடுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

ஹிமாலயனிற்கு திடீரென உருவாகியுள்ள இந்த அதிகப்படியான தேவைக்கு அதன் 2021 அப்கிரேட் வெர்சனின் வருகையை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் சில புதிய வசதிகள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட சில பாகங்களுடன் 2021 ஹிமாலயன் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

புதிய வசதிகளில் முக்கியமானதாக மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் புதிய ஹிமாலயனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஸ்மார்ட்போனில் இருக்கும் ப்ளூடூத் மூலமாக ஒவ்வொரு திருப்பலின்போதும் ஓட்டுனருக்கு நாவிகேஷன் விபரங்களை வழங்கும்.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

இது கூகுள் வரைபடங்கள் மற்றும் ராயல் என்பீல்டு அப்ளிகேஷன் மூலமாக இயக்கப்படுகிறது. புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் மட்டுமின்றி 2021 ஹிமாலயனில் சற்று கூடுதல் அகலம் மற்றும் நீளத்துடன் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடியின் வடிவத்தையும் சிறிது திருத்தியமைத்து ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ள்ளது.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

அதேபோல் தொலைத்தூர பயணங்களின்போது சவுகரியம் தொடர்ந்து இருக்கும் வகையில் இருக்கை அமைப்பும், வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு இணங்க முன் மற்றும் பின்பக்க ரேக்குகளின் வடிவத்தையும் தயாரிப்பு நிறுவனம் மறுசீரமைத்துள்ளது.

கேரளாவில் வெற்றி நடைப்போடும் நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! சேட்டன்களின் ரசனையே தனி...

மற்றப்படி அதே 411சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் 2021 ஹிமாலயனிலும் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 24.3 பிஎச்பி மற்றும் 4000- 4500 ஆர்பிஎம்-ல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
100 Royal Enfield Himalayan Bikes Sold in a Day in Kerala
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X