120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 120 ஆண்டுகள் சிறப்பு மோட்டார்சைக்கிள்கள் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் வாகன உலகில் களமிறங்கி 120 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கின்றன. இந்த நிகழ்வை முன்னிட்டு, '120 ஆண்டுகள் ஆண்டுவிழா பதிப்பு' (120 Year Anniversary Edition) எனும் பெயரில் இரு சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள்கள் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

உலகளவில் இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இருசக்கர வாகனங்களை வெளியீடு செய்ய இஐசிஎம்ஏ 2021-ஐ ராயல் என்பீல்டு நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், நிறுவனம் இச்சிறப்பு பதிப்பு வாகனங்களை மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இந்தியாவிற்கும் சில யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான விற்பனை எப்போது தொடங்கும் என்கிற தகவலே தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 6ம் தேதி அன்று இருசக்கர வாகனத்திற்கான விற்பனை ஆன்லைன் வாயிலாக தொடங்கும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

அதேநேரத்தில், வெளியீட்டைத் தொடர்ந்து இப்பைக்குகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுவிழா பதிப்புகள் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய சந்தையை வந்தடை இருக்கின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

உலகளவில் விற்பனைச் செய்ய வெறும் 480 யூனிட்டுகளை மட்டுமே நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதில், 120 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 60 யூனிட்டுகள் கான்டினென்டல் ஜிடி 650யும், 60 யூனிட்டுகள் இன்டர்செப்டார் 650யும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இதேபோன்று குறைவான எண்ணிக்கையிலேயே இருசக்கர வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அன்னிவர்சரி எடிசன் இரட்டையர் பைக்குகளில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இவை 120 ஆண்டுகள் ஆண்டுவிழா சிறப்பு பதிப்புகள் என்பதை குறிக்கும் வகையில் தனித்துவமான நிறங்கள் மற்றும் கிராஃபிக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அலங்காரத்தின் காரணமாக வழக்கமான இரட்டையர்களைக் காட்டிலும் இவை சற்று அதிக விலையைக் கொண்டதாக விற்பனைக்கு வர இருக்கின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

அந்தவகையில், இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு ரூ. 3.25 லட்சமும், கான்டினென்ட்ல் ஜிடி 650 பைக்கிற்கு ரூ. 3.40 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட இருக்கின்றன. மேலே பார்த்த எக்ஸ்-ஷோரூம் விலைகளிலேயே இரு சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

புதிய சிறப்பு பதிப்பு வாகனங்கள் ராயல் என்பீல்டு பிரியர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்ற வேலையில் தற்போது அதன் அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இருசக்கர வாகன உலகையே அதகளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

ராயல் என்பீல்டு நிறுவனம் இஐசிஎம்ஏ 2021 இல் மற்றுமொரு இருசக்கர வாகன மாடலையும் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்ஜி650 எனும் மாடலையே நிறுவனம் அந்த உலக அரங்கில் இரட்டையர்கள் சிறப்பு பதிப்பைத் தொடர்ந்து காட்சிப்படுத்தியது. இப்பைக்கும் பலரின் கவனத்தை குறிப்பாக இருசக்கர வாகன ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. ஆனால், இப்பைக்கின் வருகை எப்போது அமையும் என்கிற தகவல் தற்போது வெளியிடப்படவில்லை.

Most Read Articles

English summary
120 year anniversary edition royal enfield 650 twins india launch details revealed
Story first published: Tuesday, November 30, 2021, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X