125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இந்திய இருசக்கர வாகன துறையில் 125சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவு எப்போதும் போட்டி மிகுந்தது. இத்தகைய பிரிவில் எந்தெந்த 125சிசி பைக்குகள் எந்த அளவில் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

100சிசி-க்கும், 150சிசி-க்கும் மத்தியில் நிலைநிறுத்தப்படும் 125சிசி பைக்குகள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றவைகளாக விளங்குவது மட்டுமின்றி, கவனிக்கத்தக்க அளவில் செயல்திறனையும் வழங்கக்கூடியவைகளாக இருக்கின்றன. இந்த பிரிவில் கடந்த மாதத்தில் மொத்தம் 1,71,102 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இந்த எண்ணிக்கை வருடம்-வருடம் ஒப்பிடுகையிலும், மாதம்-மாதம் ஒப்பிடுகையில் பெரிய அளவில் குறைவாகும். ஏனெனில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 29.49% அதிகமாக 2,42,676 யூனிட் 125சிசி பைக்குகளும், கடந்த அக்டோபரில் 23.40% அதிகமாக 2,23,358 125சிசி பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இந்திய 125சிசி பைக்குகள் பிரிவில் தற்சமயம் ஹோண்டா சிபி ஷைன், பஜாஜ் பல்சர் 125, ஹீரோ கிளாமர், ஹீரோ ஸ்பிளெண்டர், டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் கேடிஎம் 125சிசி பைக்குகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஹோண்டாவின் சிபி ஷைன் மாடல் தான் கடந்த சில வருடங்களாகவே அதிகளவில் விற்பனையாகும் 125சிசி பைக்காக விளங்குகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 83,622 சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தாலும், வழக்கமான விற்பனையை காட்டிலும் கடந்த மாதத்தில் சற்று குறைவாகவே சிபி ஷைன் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. எந்த அளவிற்கு என்றால், 2020 நவம்பரில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 11.43% அதிகமாக 94,413 சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்க, கடந்த 2021 அக்டோபரில் சிபி ஷைன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை எளிதாக கடந்திருந்தது.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

அந்த மாதத்தில் மொத்தமாக 1,13,554 சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்த 125சிசி ஹோண்டா பைக்கின் விற்பனை 26.36% (கிட்டத்தட்ட 30 ஆயிரம் யூனிட்கள்) குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த மாதத்தில் மொத்த 125சிசி பைக்குகளின் விற்பனையில் ஹோண்டா சிபி ஷைன் மட்டுமே 48.87% பங்கை கொண்டுள்ளது.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இதற்கு அடுத்து பஜாஜ் பல்சர் 125 பைக்குகள் 42,311 யூனிட்களின் விற்பனை உடன் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளன. இதில் பல்சர் 125 மட்டுமின்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்யும் சமீபத்திய மற்றொரு 125சிசி பைக்கான என்எஸ்125-யும் அடங்குகிறது. பல்சர் என்எஸ்125 இந்த 2021ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2020 நவம்பரில் பல்சர் 125 மாடலையே 56,549 யூனிட்கள் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இந்த வகையில் 125சிசி பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை 25.18% குறைந்துள்ளது. அதேபோல் 2021 அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையிலும் இந்த எண்ணிக்கை 13.05% குறைவாகும். 3வது மற்றும் 4வது இடங்களில் ஹீரோ மோட்டோகார்பின் 125சிசி பைக்குகளான கிளாமர் மற்றும் ஸ்பிளெண்டர் மாடல்கள் உள்ளன. இவை கடந்த மாதத்தில் முறையே 21,901 மற்றும் 12,299 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இவை இரண்டின் விற்பனை எண்ணிக்கையும் கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் பெரிய அளவில் குறைவு ஆகும். எந்த அளவிற்கு என்றால், அந்த மாதத்தில் 39,899 கிளாமர் பைக்குகளும், 50,499 125சிசி ஸ்பிளெண்டர் பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது இவை இரண்டின் விற்பனையும் கடந்த மாதத்தில் சுமார் 45.11% மற்றும் 75.65% என்ற அளவில் குறைந்துள்ளது.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

2021 அக்டோபருடன் ஒப்பிடுகையில், கிளாமரின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை என்றாலும், ஸ்பிளெண்டரின் விற்பனை பாதியாக (50.47%) குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதத்தில், கடந்த நவம்பர் மாத விற்பனையை காட்டிலும் டபுளாக 24,829 125சிசி ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

125சிசி-யில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? ஒரே மாதத்தில் இத்தனை பைக்குகளா!!

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் 10,400 யூனிட்களின் விற்பனை உடன் டிவிஎஸ் ரைடர் உள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டில் தான் 125சிசி பைக்குகள் பிரிவில் ரைடர் மூலம் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 அக்டோபரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ரைடர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 125 ட்யூக் மற்றும் ஆர்சி125 பைக்குகள் அடங்கும் கேடிஎம் 125சிசி பைக்குகள் கடந்த மாதத்தில் 929 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
125cc motorcycle sales nov 2021 cb shine leads
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X