ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

பெனெல்லி நிறுவனம் நாளை இந்தியாவில் ஓர் புதுமுக இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பெனெல்லி, நாளை இந்தியாவில் ஓர் புதுமுக பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிறுவனம் 502சி எனும் க்ரூஸர் ரக இருசக்கர வாகனத்தையே நாளை (ஜூலை 29) விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

சமூக வலைதள பதிவின் வாயிலாக இந்த தகவலை பெனெல்லி உறுதி செய்துள்ளது. அதேசமயம், இப்பைக்கிற்கான புக்கிங் பணிகளை பெனெல்லி நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கி விட்டது. ரூ. 10 ஆயிரம் என்ற முன் தொகையில் கடந்த 8ம் தேதியில் இருந்து முன் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

ஓஜே எஸ்ஆர்வி500 மாடலின ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக பெனெல்லி 502சி காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் 500சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 46.8 பிஎச்பி மற்றும் 46 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

பெனெல்லி நிறுவனம் 502 சி க்ரூஸர் பைக்கை கவாஸாகி வல்கன் எஸ் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. பெரியளவில் இந்த பைக்கிற்கு போட்டியில்லாத சூழ்நிலை காணப்பட்ட நிலையில் பெனெல்லி அதிரடியாக தனது க்ரூஸர் பைக்கை களமிறக்க தயாராகியுள்ளது.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

போட்டியை மிகக் கடுமையானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இருசக்கர வாகனமாக 502சி பைக்கை பெனெல்லி தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில், அப்சைடு-டவுன் ஃபோர்க் பைக்கின் முன் வீலிலும், மோனோஷாக் அப்சார்பர் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

இவற்றுடன் சேர்த்து இரட்டை டிஸ்க் பிரேக் முன் பக்க வீலிலும், ஒற்றை ரோடார் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் 17 இன்சிலானது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், முழு எல்இடி மின்விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இரட்டை ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றன.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

இதன் பெட்ரோல் டேங்க் 21.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். தொடர்ந்து, ஸ்டெப்-அப் சேடிள் மற்றும் இரட்டை-பாட் எக்சாஸ்ட் கேனிஸ்டர் ஆகியவையும் பெனெல்லி 502 சி க்ரூஸர் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பைக் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 500 சிசி பைக்குகளுக்கும் போட்டியாக விற்பனையில் ஈடுபட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு, கவாஸாகி ரெண்டு பேருக்கும் செம்ம போட்டி இருக்கு... நாளை அறிமுகமாகிறது பெனெல்லி 502சி பைக்!

பெனெல்லி 502சி க்ரூஸர் பைக் இந்தியாவில் ரூ. 5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
2021 Benelli 502C Cruiser Bike Launch In India Tomorrow. Read In Tamil.
Story first published: Wednesday, July 28, 2021, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X