பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இன்று (ஜூலை 8) அதன் புதிய ஆர் 1250ஜிஎஸ் மற்றும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ ஆர் 1250ஜிஎஸ் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.20.45 லட்சமாகவும், அதன் அட்வென்ச்சர் வெர்சனின் விலை ரூ.22.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

இந்த இரு பைக்கிலும் 1254சிசி 2-சிலிண்டர் இன்-லைன் பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 7,750 ஆர்பிஎம்-இல் 100 கிலோவாட்ஸ் (136 எச்பி) மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 143 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

இந்த மோட்டார்சைக்கிள்கள் குறித்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவை இரண்டிலும் ப்ரோ ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வழக்கமான மழை மற்றும் சாலை என்ற ரைடிங் மோட்களும் தொடரப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

இதனால் இந்த புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை எந்தவொரு சாலையிலும் இயக்கி செல்ல முடியும். ப்ரோ ரைடிங் மோட்களில் டைனாமிக், டைனாமிக் ப்ரோ, எண்டூரோ மற்றும் எண்டூரோ ப்ரோ என்பவை அடங்குகின்றன.

இதில் டைனாமிக் ப்ரோ மற்றும் எண்டூரோ ப்ரோ ரைடிங் மோட்களில் தனிப்பயனாக்கல் தேர்வுகள் உள்ளன. இவற்றின் மூலம் உரிமையாளர் பைக்கின் பண்பை தனது ரைடிங் ஸ்டைலிற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

புதிய ஆர் 1250ஜிஎஸ் மற்றும் ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகளில் ஸ்போர்டியான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை வழங்கக்கூடிய X-வடிவிலான விளக்குகளுடன் முழு-எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது போதாது என்போர்க்கு, புதிய லைட்டிங் செயல்பாடுகள், க்ரூஸிங் விளக்கு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர் பல்ப்களையும் கூடுதல் தேர்வாக தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

பிஎம்டபிள்யூவின் அளவில் பெரிய அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆர் 1250ஜிஎஸ் & ஆர் 1250ஜிஎஸ் அட்வென்ச்சர் அறிமுகம்

இந்த அட்வென்ச்சர் பைக்குகளுக்கு பெயிண்ட் தேர்வுகளாக இளம் வெள்ளை மற்றும் பனிக்கட்டியின் க்ரே நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிஎம்டபிள்யூ ஜிஎஸ் குடும்பத்தின் 40 வருட நிறைவை நினைவுக்கூறும் ‘40 வருட ஜிஎஸ்' ஸ்பெஷல் எடிசனிலும் இந்த பைக்குகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிலையான செயல்திறன், ஈர்க்கக்கூடிய அளவிலான உபகரணங்கள் மற்றும் ஒப்பிட முடியாத பயண அனுபவம் ஆகியவை ஜிஎஸ் வரம்பின் முக்கிய பண்புகளாகும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட இந்த புதிய அட்வென்ச்சர் பைக்குகள் சாலை & ஆஃப்-ரோடு பயணம் ஆகியவற்றின் சரியான தொகுப்பை வழங்கும்" என பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியாவின் தலைவர் விக்ரம் பவா தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
BMW Motorrad India has launched the new BMW R 1250 GS and BMW R 1250 GS Adventure motorcycles in India. The new BMW R 1250 GS and the new BMW R 1250 GS Adventure will be available as Completely Built-up Units (CBU) and can be booked at BMW Motorrad dealerships from today onwards.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X