சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

2021 ஹயபுஸாவின் பெயர் சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் எப்போது விற்பனைக்கு வரும் உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

சில தினங்களுக்கு முன்பு முதல் டீசர் வீடியோவில் காட்சி தந்த புதிய தலைமுறை ஹயபுஸா பைக்கை பற்றிய விபரங்களை படங்களுடன் உலகளவில் இன்று அதிகாரப்பூர்வமாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிடவுள்ளது.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

அதற்கு முன்னதாக தற்போது சுஸுகியின் ஆஸ்திரேலிய இணையத்தள பக்கத்தில் இந்த சூப்பர் பைக்கின் பெயர் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் வெப்சைட்டில் இருந்து பைக்கின் படம் சிறிது நேரத்தில் நீக்கப்பட்டுவிட்டாலும், அந்த படம் அதற்கு முன்பாகவே இணையத்தில் கசிய ஆரம்பித்துவிட்டது.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

சர்வதேச சந்தைகளில் கடந்த 2019ல் இருந்து விற்பனை நிறுத்தப்பட்ட ஹயபுஸா பைக் மாடலில் புதிய தலைமுறை அப்கிரேடாக காஸ்மெட்டிக் மாற்றங்கள், வசதிகள் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

ஹயபுஸாவின் அடையாள டிசைன் லைன்களில் மாற்றமில்லை என்றாலும், புதிய ஸ்டைலிங் பாகங்கள் கூர்மையான எட்ஜ்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பைக்கின் முன்பகுதி காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக, கூடுதல் அகலமானதாக காட்சியளிக்கிறது.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

எல்இடி ஹெட்லைட் மற்றும் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் புதியதாக க்ரோம் தட்டுகளை மேற்புறத்தில் கொண்டுள்ளன. லேட்டஸ்ட் கயாபா சஸ்பென்ஷன் செட்அப்-இன் உதவியுடன் அதே இரட்டை-ஸ்பார் வகையை சேர்ந்த அலுமினியம் ஃப்ரேமில்தான் புதிய ஹயபுஸா பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

பைக்கின் விளம்பர வீடியோவில் புதிய ஹயபுஸா அதிகப்பட்சமாக மணிக்கு 290கிமீ வேகத்தில் இயங்கும் என்பதை அறிந்திருந்தோம். இப்படி அதிகப்படியான வேகத்தில் இயங்குவதால் இவ்வாறான சூப்பர் பைக்கில் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் கார்னரிங் தொகுப்பு, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

புதிய ஹயபுஸாவில் பெரிய 1440சிசி இன்லைன் 4-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பழைய 1340சிசி என்ஜினிற்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. யூரோ -5க்கு இணக்கமானதாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகியின் வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஹயபுஸாவின் பெயர்!! மிக விரைவில் அறிமுகமாகிறது...

புதிய ஹயபுஸாவின் இந்திய வருகை குறித்த எந்த விபரத்தையும் சுஸுகி நிறுவனம் வெளியிடவில்லை. எதிர்காலத்தில் பெரிய என்ஜின் கொண்ட பைக்குகளுக்கு நம் நாட்டில் வரவேற்பு கிடைத்தால் ஹயபுஸா பைக்கை கொண்டுவர சுஸுகி நிறுவனம் யோசிக்கும்.

Most Read Articles
English summary
2021 Suzuki Hayabusa Appears On Official Website – Ahead Of Debut Today
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X