இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

கேடிஎம் நிறுவனம் அதன் புதிய தலைமுறை ஆர்சி பைக்குகளை இந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியீடு செய்திருந்தது. வெளிநாட்டு சந்தைகளில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் புதிய கேடிஎம் ஆர்சி பைக்குகள் இந்தியாவிற்கு அதனை தொடர்ந்து கொண்டுவரப்படலாம்.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

இந்த நிலையில் தற்போது இவற்றின் இந்திய அறிமுகம் தொடர்பான டீசர் ஒன்று கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகின்றோம்.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 என்ற மூன்று கேடிஎம் ஆர்சி பைக்குகளும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுவரவுள்ளன. மூன்றும் ஒன்றாக அப்டேட் செய்யப்படுவதால், அப்டேட் செய்யப்பட்ட பின்னர் இவை ஒவ்வொன்றிற்கு இடையேயும் சில ஒற்றுமைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

இந்த புதிய கேடிஎம் ஆர்சி பைக்குகளுக்கு இந்தியாவில் சில டீலர்ஷிப் மையங்களில் முன்பதிவுகள் நடைபெற்று வருவதை ஏற்கனவே நமது செய்திதளத்தில் கூறியிருந்தோம். அதேபோல் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் இந்த புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்குகளை தயாரிக்கும் பணிகளும் ஏற்கனவே துவங்கிவிட்டன.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

இன்னும் இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதுதான் பாக்கி. புதிய ஃப்ரேம் வேலைபாட்டில் இந்த மூன்று 2021 ஆர்சி பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதால், இவற்றின் எடை முந்தைய தலைமுறையை 1.5 கிலோ அளவில் குறைந்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

குறுக்கு நெடுக்கான ஃப்ரேம் மற்றும் போல்ட்-அன் பின்பக்க சப் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்ட இந்த புதிய கட்டமைப்பினால் மோட்டார்சைக்கிள்களின் அதி-வேக நிலைத்தன்மையும், ரைடர் உணர்வும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றின் சஸ்பென்ஷன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

அதேபோல் ப்ரேக்கிங் வன்பொருள்களிலும் பெரியதாக எந்த அப்டேட்டும் இல்லை. ஆனால் இந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களை வழங்க கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அலாய் சக்கரங்களில் சில ஸ்போக்குகளும், திறந்த ஹப்-களும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

இத்தகைய சக்கரங்கள் பைக்கின் ஹேண்ட்லிங்கை மேம்படுத்துவது மட்டுமின்றி, எடையையும் ஆர்சி 125 & ஆர்சி390 பைக்குகளில் 3.4 கிலோ வரையிலும், ஆர்சி200 மாடலில் 1 கிலோ குறைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு இரட்டை-சேனல் ஏபிஎஸ் நிலையாக இந்த அனைத்து மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

ஸ்டைலை பொறுத்தவரையில், இந்த மூன்று பைக்குகளும் எல்இடி டிஆர்எல் உடன் புதிய ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் திருத்தப்பட்ட முன்பக்கத்தை பெற்றுள்ளன. மற்ற தோற்ற அப்கிரேட்கள் என்று பார்த்தால், சற்று கூடுதல் பருமனான பெட்ரோல் டேங்க், திருத்தப்பட்ட டெயில்பகுதி மற்றும் புதிய பாடி கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை கூறலாம்.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

பருமனான பெட்ரோல் டேங்கினால் கூடுதல் அகலத்தை பெற்றுள்ளதால் புதிய தலைமுறை ஆர்சி பைக்குகளின் காற்று இயக்கவியல் பண்பு மேம்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது பக்கவாட்டு பேனல்களில் காற்று துளைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த மூன்று புதிய ஆர்சி பைக்குகளில் சற்று வித்தியாசமானது எதுவென்றால், ஆர்சி200 தான்.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

ஏனெனில் மற்ற இரண்டும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாயினை கொண்டுள்ளன. ஆனால் புதிய தலைமுறை ஆர்சி200 பைக்கில் மட்டும் நறுக்கப்பட்ட-எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்படவுள்ளது. இந்த அப்கிரேட்களுக்கு ஏற்ப இவற்றில் புதிய நிறத்தேர்வுகளும் வழங்கப்பட உள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

இதில் ஆரம்ப-நிலை ஆர்சி125 பைக் ஆரஞ்ச் ஹைலைட்களுடன் கருப்பு & ஆரஞ்ச் ஹைலைட்களுடன் வெள்ளை நிறங்களை தேர்வுகளாகவும், அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி200 வெள்ளை/ஆரஞ்ச் & கருப்பு/ஆரஞ்ச் பெயிண்ட்களை தேர்வுகளாகவும், புதிய தலைமுறை ஆர்சி390 பைக் நீலம்/ஆரஞ்ச் என்ற ஒற்றை நிறத்தேர்வை மட்டுமே பெற்று வரவுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியை பெற்றது 2021 கேடிஎம் ஆர்சி125!! டீசர் வெளியீடு!

மற்றபடி இவற்றின் என்ஜின் அமைப்புகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இதில் குறிப்பாக 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினை பெறும் ஆர்சி390 பைக்கில் வழக்கம்போல் அதிகப்பட்சமாக 44 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலே கிடைக்கும். என்றாலும் பெரிய காற்று பெட்டகத்தினால், முந்தைய தலைமுறையை காட்டிலும் 11kmph கூடுதல் வேகத்தில் இந்த பைக் செல்லும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2021 KTM RC 125 Homologated – India Launch Teaser Out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X