Kawasaki Versys1000 அறிமுகம்! இதன் விலையில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2டாடா பஞ்ச் காரையே வாங்கிடலாம்!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் வெர்சிஸ் 1000 (Versys 1000) எனும் புதுமுக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் ஆகும். அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் பஞ்ச் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. இத்துடன் இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இந்த மைக்ரோ எஸ்யூவி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

இக்காருக்கு அறிமுக விலையாக டாடா நிறுவனம் ரூ. 5.49 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரின் இரு யூனிட்டுகளின் விலையை அடிக்கும் வகையில் ஓர் மிக விலையுயர்ந்த பைக்கை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

2022 கவாஸாகி வெர்சிஸ் 1000 எனும் புதிய மாடலையே கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் இன்று (அக்டோபர் 29) அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கிற்கு உச்சபட்சமாக ரூ. 11.55 லட்சம் என்ற விலையை கவாஸாகி நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது டாடா பஞ்ச் காரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

இதுமட்டுமின்றி நிஸான் மேக்னைட், மாருதி சுசுகி பலினோ, ரெனால்ட் கைகர் மற்றும் ட்ரைபர் உள்ளிட்ட கார்களை விடவும் மிக அதிக விலைக் கொண்டதாக கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் அறிமுகத்தை முன்னிட்டு தற்போது பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் பைக்குகளை டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

கேன்டீ லைம் கிரீன் நிற தேர்வில் 2022 கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பைக்கில் பிஎஸ்6 தர 1,043 சிசி திறனை வெளியேற்றக் கூடிய இன்லைன் நான்கு சிலிண்டர் லிக்யூட் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரை 9,000 ஆர்பிஎம்மிலும், 102 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும். இதுமட்டுமின்றி, க்ரூஸ் கன்ட்ரோல், கவாஸாகி கார்னரிங் மேனேஜ்மென்ட் ஃபங்க்ஷன்ஸ், டிராக்சன் கனட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் த்ராட்டில் வால்வுகள் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் புதிய வெர்சிஸ் 1000 பைக் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

பைக்கை இலகு ரக வாகனமாக தயார் செய்ய ட்வின்-ட்யூப் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், எல்இடி ஹெட்லேம்ப், அட்ஜஸ்டபிள் ஃப்ளை ஸ்கிரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பவர் சாக்கெட் மற்றும் இன்னும் பல சிறப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

தொடர்ந்து, ரேடியல் மவுண்ட் 4 பிஸ்டன் காலிபர்கள் உடன் கூடிய 310 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், ஒற்றை பிஸ்டன் காலிபர் 250 மிமீ ரியர் டிஸ்க் உடனும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு வசதியாக நிறுவனம் கே-கேர் எனம் சிறப்பு பரமாரிப்பு பேக்கேஜையும் அறிவித்திருக்கின்றது. நான்கு வருடங்களுக்கான பராமரிப்பு மற்றும் வாரண்டியை இது வழங்கும்.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

கவாஸாகி நிறுவனம் அண்மையில் டபிள்யூ800 பைக் மாடலை உலகளவில் வெளியீடு செய்தது. அப்டேட் செய்யப்பட்ட இந்த பைக்கில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறத் தேர்வு, கவர்ச்சிகரமான உடல் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை காஸ்மட்டிக் மாற்றங்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் இந்தியாவில் 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

Kawasaki Versys 1000 அறிமுகம்... இதன் விலையில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற இரு டாடா பஞ்ச் கார்களையே வாங்கிடலாம்!

அப்டேட் 2022 கவாஸாகி டபிள்யூ800 மோட்டார்சைக்கிளில் 773சிசி, ஏர்-கூல்டு, ஃப்யுவல்-இன்ஜெக்ஷன் திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகப்பட்சமாக 48 பிஎஸ் பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 62.9 என்எம் டார்க் திறனை 4,800 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றக் கூடியது. இந்த என்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைந்து இயங்கும். இத்துடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 kawasaki versys 1000 launched in india at rs 11 55 lakhs
Story first published: Friday, October 29, 2021, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X