2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியா பைக் வீக்-2021 நிகழ்ச்சியின் மூலம் 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் (Kawasaki Z650RS) பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Metallic Moondust Gray மற்றும் Candy Emerald Green என மொத்தம் இரண்டு வண்ண தேர்வுகளில், 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் கிடைக்கும்.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வமான விலையையும் கவாஸாகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி 6,65,000 என்ற ஆரம்ப விலையில் 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் கிடைக்கும். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதாவது இஸட்650 பைக்குடன் ஒப்பிடும்போது இதன் விலை 41 ஆயிரம் அதிகம். அதே நேரத்தில் நின்ஜா 650 பைக்குடன் ஒப்பிடும்போது இதன் விலை 4 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் ட்ரையம்ப் ட்ரைடண்ட் 660 பைக்குடன், 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் போட்டியிடும். ட்ரையம்ப் ட்ரைடண்ட் 660 பைக்கின் விலை 6.95 லட்ச ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக்கின் டெலிவரி பணிகள் நடப்பு மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக்கில், 649 சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், முன்பை விட செயல்திறன் மிக்கதாக இருக்கும் என கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

பிரேக்கிங்கை பொறுத்தவரை இந்த பைக்கின் முன் பகுதியில் ட்வின் 300 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில் சிங்கிள் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக்கின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. பார்த்த உடனேயே இஸட்900ஆர்எஸ் பைக்கின் டிசைனை இது நினைவுபடுத்துகிறது.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் இந்த பைக்கில் நேர்த்தியான தோற்றம் கொண்ட வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மல்டிபிள் ஸ்போக் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்போக்குகளின் நிறத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. இதன்படி Metallic Moondust Gray வண்ண தேர்வானது, கருப்பு நிற ஸ்போக் வீல்களை பெற்றுள்ளது.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் Candy Emerald Green வண்ண தேர்வானது, கோல்டன் நிற ஸ்போக்குகளை பெற்றுள்ளது. இதுவும் சிறப்பான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த பைக்கில் ட்வின்-போடு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த பைக்கிற்காக காத்திருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்கள், 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக்கில் இடம்பெற்றுள்ளன. நடப்பு டிசம்பர் மாதமே டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகி வருவதால், 2022 கவாஸாகி இஸட்650ஆர்எஸ் பைக்கிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 kawasaki z650rs launched in india
Story first published: Saturday, December 4, 2021, 22:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X