2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

2022 KTM RC 125, 200, 390 பைக்குகளை பற்றிய விபரங்கள் ஏற்கனவே இணையத்தில் கசிய துவங்கிவிட்டன. இந்த நிலையில் இந்த RC பைக்குகள் குறித்த விபரங்கள் KTM நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

உலகளவில் வெளியிடுவதற்காக புதிய தலைமுறை RC125, 200 & 390 மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் KTM ஈடுப்பட்டு ஏற்கனவே நமக்கு தெரிந்தது தான். இந்த நிலையில் தான் KTM-இன் இந்திய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இந்த மோட்டார்சைக்கிள்கள் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை தான் கீழே காண்கிறீர்கள்.

RC200-ஐ போன்று KTM RC125 மோட்டார்சைக்கிளிலும் புதிய உடல்வேலை & ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 200சிசி பைக்கிற்கு இணையாக துணை-ஃப்ரேம்களுடன் புதிய சேசிஸில் 2022 RC125 கொண்டுவரப்பட உள்ளது. தற்போதைய வெர்சன்களுடன் ஒப்பிடுகையில், புதிய RC125 & 200 இரண்டும் பெரிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

இவற்றின் முன்பக்கத்தில் புதிய பிளவுப்பட்ட எல்இடி யூனிட் உடன் ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் புதிய நிறத்தேர்வுகளுடன் புதிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, தாழ்வான ஹேண்டில்பார்கள், சற்று முன்பக்கமாக நகர்த்தப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி மற்றும் படிக்கட்டு போன்ற இருக்கை அமைப்பினால் இந்த KTM பைக்குகளில் பயணம் அனுபவமும் மிகவும் சவுகரியமானதாக இருக்கும்.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

இவற்றுடன் பெட்ரோல் டேங்க் பகுதி நன்கு பருமனானதாக வழங்கப்பட, பைக்குகளின் முன்பக்கத்தை மிகவும் திருத்தியமைத்துள்ளனர். இதன் காரணமாக டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் விளக்குகளின் பொசிஷன் மாறியுள்ளது. அதேபோல் சிறந்த ப்ரேக்கிங் செயல்திறனிற்காக ப்ரேக்கிங் சிஸ்டமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

கருப்பு-ஆரஞ்ச் & வெள்ளை-ஆரஞ்ச் என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் 2022 RC125 & RC200 என்ற மோட்டார்சைக்கிள்கள் கொண்டுவரப்பட உள்ளன. மறுப்பக்கம் பெரிய தோற்றம் கொண்ட RC390 பைக்கிற்கு நீலம்-ஆரஞ்ச் நிறத்தேர்வு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

தற்போது நமக்கு கிடைத்துள்ள வீடியோவின் மூலமாக இந்த புதிய RC பைக்குகளில் வழங்கப்பட்டுள்ள புதிய எக்ஸாஸ்ட் சத்தத்தையும் கேட்க முடிகிறது. 2022 KTM RC125 பைக்கில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 14.5 பிஎச்பி மற்றும் 12 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

2022 KTM RC200 பைக்கின் என்ஜினிலும் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதன் 199.5சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 24.6 பிஎச்பி மற்றும் 19.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மற்றப்படி இந்த இரு 2022 பைக்குகளின் விலைகள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

KTM RC125 மற்றும் RC200 மோட்டார்சைக்கிள்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.8 லட்சம் மற்றும் ரூ.2.08 லட்சம் என்ற அளவில் உள்ளன. புதிய அப்கிரேட்களினால் இந்த விலைகளில் நிச்சயம் அதிகரிப்பு கொண்டுவரப்படும். KTM RC390 மோட்டார்சைக்கிளை பொறுத்தவரையில், இதன் முந்தைய மாடலின் விற்பனை ஏற்கனவே நிறுத்தி கொள்ளப்பட்டுவிட்டது.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் புதிய தலைமுறை RC390 பைக்கிற்கான முன்பதிவுகள் சில குறிப்பிட்ட டீலர்ஷிப் மையங்களில் மட்டும், இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள இதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

இந்த நிலையில் தற்போது KTM இன்ஸ்டாகிராமில் இந்த 390சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கின் தோற்றத்தை வெளியிட்டு இருப்பதன் காரணமாக 2022 RC390 பைக் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. புதிய தோற்றத்தில் வழக்கமான ஆரஞ்ச் உடன் நீல நிறத்தையும் இந்த பைக் பெற்றுவரவுள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

பெயிண்ட் மட்டுமின்றி, இரட்டை பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்களுக்கு மாற்றாக ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப்-ஐ புதிய RC390 பெற்றுவரவுள்ளது. அதேபோல் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களையும் கூர்மையானதாகவும், புதிய பிளவுப்பட்ட இருக்கை அமைப்பையும், மாற்றியமைக்கப்பட்ட பின்பக்கத்தையும் இந்த பைக்கில் எதிர்பார்க்கிறோம்.

2022 RC பைக்குகளின் தோற்றத்தை வெளியிட்டது KTM!! RC200-க்கு இணையான தோற்றத்தில் RC125!

மற்றப்படி மற்ற புதிய தலைமுறை RC பைக்குகளை போல் இதன் என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. RC390 மோட்டார்சைக்கிளின் 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி மற்றும் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2022 KTM RC 125, 200, 390 Officially Teased, Exhaust Note Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X