இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கேடிஎம் ஆர்சி 200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. பைக்கின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

கேடிஎம் நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளில் ஒன்றாக ஆர்சி 200 மாடல் பைக் இருக்கின்றது. இந்த பைக்கின் அடுத்த தலைமுறை மாடலே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. பன்முக அப்டேட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த பைக் எந்தவொரு விலையுயர்வையும் பெறாமல் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 2.09 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதே விலையிலேயே இதன் முந்தைய வெர்ஷனும் விற்பனைக்குக் கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இப்பைக்கின் வருகை இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக, விலை உயர்வு இல்லாமல் ஆர்சி 200 வந்திருப்பது கேடிஎம் வாகன பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேவேலையில் இந்த விலையை நிறுவனம் மிக விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு பழைய விலையை சலுகையாக கேடிஎம் அறிவித்திருக்கின்றது.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனவே மிக விரைவில் பைக்கின் விலை உயர்வது நிச்சயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

இதன் டிசைனிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்பைக் உலகளவில் வெளியீட்டைப் பெற்ற போதே இந்த தகவல் உறுதியாகிவிட்டது. அதிக மெச்சூரிட்டி, குறைந்த ஷார்ப் மற்றும் பெரிய உருவத்தில் இப்பைக் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, புதிய எல்இடி ஹெட்லமேப் செட்-அப் மற்றும் எல்சிடி கன்சோல் ஆகியவற்றை கேடிஎம் ஆர்சி 200 பெற்றிருக்கின்றது.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

250 ட்யூக் பைக்கிலும் இதே திரையே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, இன்டிகேட்டர் மின் விளக்குகளைக் கூட நிறுவனம் தற்போது அழகானதாக மாற்றியமைத்திருக்கின்றது. இதேபோல் அதிக எரிபொருளை சேமிக்கின்ற வகையில் பெரிய பெட்ரோல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

இது 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்டது. முந்தைய வெர்ஷனில் 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்கே பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஹார்ட்வேர் அம்சங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போல்டட் சப்-ஃப்ரேமிலான ஸ்பிளிட் ரக ட்ரெல்லிஸ் ஃப்ரேம், புதிய டபிள்யூபி அபெக்ஸ் மோனோஷாக் மற்றும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஹேண்டில்பார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை சுவாரஷ்யமானதாக மாற்றும் நோக்கில் இந்த அம்ச மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் 25.4 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய 199.5 சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை.

இத எதிர்பார்க்கவே இல்ல! பழைய விலையில் அடுத்த தலைமுறை KTM RC 200 அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

அதேவேலையில் பெரிய ஏர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கின்றது. மிக சிறந்த தோற்றம் மற்றும் ரைடிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. புதிய கேடிஎம் ஆர்சி 200 பைக் அறிமுகமானதை முன்னிட்டு தற்போது புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் தளம் வாயிலாக புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த பைக் தற்போது விற்பனையில் இருக்கும் யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2022 ktm rc 200 launched in india at rs 2 09 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X