டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய கோல்டு லைன் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய டிரையம்ப் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

டிரையம்ப் பொன்னேவில்லே வரிசையில் விற்பனை செய்யப்பட்டுவரும் டி100, ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர், ஸ்பீடுமாஸ்டர், பாப்பர், டி120 மற்றும் டி120 ப்ளாக் மோட்டார்சைக்கிள்களில் புதிய கோல்டு லைன் எடிசன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன்கள் அனைத்தும் லிமிடெட் எடிசன்கள் ஆகும்.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

அதாவது 12 மாதங்களுக்கு மட்டுமே இவை நம் நாட்டு சந்தையில் விற்பனையில் இருக்குமாம். இந்த கோல்டு லைன் எடிசன்களும் அடுத்த ஆண்டில் இந்திய ஷோரூம்களுக்கு வந்தடைய உள்ளன. வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் தோற்றத்தில் சற்று வித்தியாசப்படுகின்றன.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

இத்தகைய வித்தியாசத்திற்காக, கஸ்டம் நிறத்தேர்வுகளுடன், பெயருக்கு ஏற்ப கையால் பெயிண்ட் செய்யப்பட்ட கோல்டு லைன்களை இந்த கோல்டு லைன் எடிசன்களில் டிரையம்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாறுதல்களை தவிர்த்து இந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களின் மற்ற இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

இந்த புதிய கோல்டு லைன் எடிசன்கள் குறித்து டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதில் பல புதிய கோல்டு லைன் எடிசன்களின் டிசைன்கள் இரண்டு-வண்ண தேர்வுகளுடன் துவங்குகின்றன. இதில் இரு நிறங்கள் இணையும் பகுதி தட்டையானதாக இருக்கும்.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

கோல்டு லைன்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வாள்-லைனர் தூரிகையை பயன்படுத்தி, கலைஞரால் வழக்கமான ஸ்ட்ரோக்கில் மிகவும் கவனமாக கையால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற ஹேண்ட்-லைன் டிரையம்ப் பைக்குகளை போன்று இந்த ஸ்பெஷல் கோல்டு லைன் எடிசன்களும் வடிவமைத்த கலைஞர்களின் பிரத்யேகமான தனி அடையாளங்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளன என கூறப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

இந்த டிரையம்ப் பொன்னேவில்லே பைக்குகளுக்கு சிறப்பு பெயிண்டை கொடுப்பதற்காக யுகே மற்றும் தாய்லாந்தில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020இல் அறிமுகமாகி பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் கோல்டு லைன் லிமிடெட் எடிசன் மோட்டார்சைக்கிளின் வெற்றியை பறைச்சாற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த புதிய பென்னேவில்லே கோல்டு லைன் எடிசன்கள் அனைத்தும் வெவ்வேறான நிறங்களை பெற்றுள்ளன. ஆனால் ஒரே மாதிரியாக கையால்-பெயிண்ட் செய்யப்பட்ட கோல்டு பின்ஸ்ட்ரிப்பிங்கை கொண்டுள்ளன. இந்த கோல்டு நிறத்திற்கு பளிச்சிடக்கூடிய செல்லுலோஸ் அரக்கு-ஆல் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

இதில் பென்னேவில்லே டி100 கோல்டு லைன் எடிசன் சில்வர் ஐஸ் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பைக்கின் பெட்ரோல் டேங்க் பச்சை நிறத்தில் இருக்க, இந்த பச்சை நிறத்தை பக்கவாட்டு பேனல்களிலும் பார்க்க முடிகிறது. ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ளர் கோல்டு லைன் எடிசன் மேட் பசிஃபிக் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு மேட் பசிஃபிக் நீல நிற ஃப்ளை ஸ்க்ரீன் மற்றும் உயர்-நிலை மட்கார்டும் ஆக்ஸஸரீகளாக அதன் ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்திற்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளன.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

பொன்னேவில்லே ஸ்பீடுமாஸ்டர் கோல்டு லைன் எடிசனிற்கும் பெட்ரோல் டேங்க்கில் சில்வர் ஐஸ் நிறத்துடன் சாப்பையர் கருப்பு நிறமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு சிறிய அளவிலான மட்கார்டையும் கூடுதல் தேர்வாக டிரையம்ப் வழங்கியுள்ளது. பாப்பர் கோல்டு லைன் எடிசனின் பிரதான நிறம் எதுவென்றால் கார்னிவல் சிவப்பு. இது பெட்ரோல் டேங்க் மற்றும் முன் & பின்பக்க மட்கார்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

பொன்னேவில்லே டி120 கோல்டு லைன் எடிசன் பைக்கில் பக்கவாட்டு பேனல் பகுதியில் பச்சை நிறத்தையும், மற்ற இடங்களில் சில்வர் ஐஸ் நிறத்தையும் பார்க்க முடிகிறது. டி120 ப்ளாக் கோல்டு எடிசன் அதன் பெயருக்கு ஏற்ப முழுக்க முழுக்க அடர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பெட்ரோல் டேங்க் & பக்கவாட்டு பேனல்களில் மேட் சில்வர் ஐஸ் நிறத்தையும் ஹைலைட்டாக காண முடிகிறது.

டிரையம்ப்பின் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகள் அறிமுகம்!! 2022இல் விற்பனை துவக்குகிறது!

மற்றப்படி இவற்றின் விலைகள் பற்றிய விபரங்கள் தற்[போதைக்கு வெளியிடப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம். இந்தியாவில் ஆரம்ப நிலை டிரையம்ப் பொன்னேவில்லே பைக்காக டி100 ரூ.9.31 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகப்பட்சமாக பொன்னேவில்லே பாப்பர் மாடல் ரூ.12.01 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
2022 Triumph Bonneville Gold Line Editions Breaks Cover.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X