தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட 350சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

இந்தியாவில் தற்போதைக்கு 350சிசி-யில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் 350, எலக்ட்ரா 350 மற்றும் ஹோண்டா சிபி350 என்ற ஐந்து மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை ஐந்தும் சேர்த்து மொத்தமாக கடந்த ஆகஸ்ட்டில் 36,543 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 20.86% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 46,177 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் 2021 ஜூலை மாத்துடன் தற்போதைய ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலும், 6.38% குறைந்துள்ளது.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

கடந்த ஜூலை மாதத்தில் 39,034 350சிசி மோட்டார்சைக்கிள்கள் நம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 350சிசி-யில் ராயல் என்பீல்டு நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இதனால் மொத்த விற்பனையில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனம் 95 சதவீத பங்கை கொண்டுள்ளது.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரதான விற்பனை மாடல் கிளாசிக் 350 ஆகும். இதுதான் இந்த லிஸ்ட்டிலும் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நமது நாட்டில் மொத்த 23,453 கிளாசிக் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது மொத்த 350சிசி மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 64.18% ஆகும்.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

இருப்பினும் கிளாசிக் 350 பைக்கின் இந்த எண்ணிக்கை 2020 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 32.59% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான மீட்டியோர் 350 உள்ளது.

No Domestic 350cc Aug-21 Aug-20 Growth (%)
1 Classic 350 23,453 34,791 -32.59
2 Meteor 350 6,381 0 -
3 Bullet 350 3,699 7,257 -49.03
4 Electra 350 1,963 4,129 -52.46
5 CB 350 1,047 0 -
தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

புத்தம் புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட மீட்டியோர் 350 கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாவது இடத்தை புல்லட் 350 3,699 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் 2020 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 7,257 ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

புல்லட் 350 பைக்கின் வாடிக்கையாளர்களை மீட்டியோர் 350 தன் பக்கம் இழுத்து கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள எலக்ட்ரா 350-இன் விற்பனையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட்டில் 1,963 எலக்ட்ரா பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

350சிசி-யில் ராயல் என்பீல்டு பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் ஹோண்டா 2 வீலர்ஸின் சிபி350-யும் விற்பனை செய்யப்படுகிறது. ராயல் என்பீல்டின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட சிபி350 & சிபி350 ஆர்எஸ் பைக்குகள் கடந்த மாதத்தில் 1,047 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு கடந்த மாதத்தில் செய்யப்பட்ட ஏற்றுமதியில் 350சிசி மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 முன்னிலை வகிக்கிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,378 மீட்டியோர் 350 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இதற்கு போட்டி மாடலான ஹோண்டா சிபி350 உள்ளது.

தற்போதைக்கு 350சிசி-யில் அதிக பேரால் வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்!! எதுவென்று தெரியுமா?
No Exports 350cc Aug-21 Aug-20 Growth (%)
1 Meteor 350 2,378 0 -
2 CB 350 822 0 -
3 Classic 350 719 178 303.93
4 Bullet 350 0 0 -
5 Electra 350 0 0 -

இந்தியாவின் சிறந்த விற்பனை ராயல் என்பீல்டு பைக்காக விளங்கும் கிளாசிக் 350 பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இருப்பினும் 2020 ஆகஸ்ட்டில் 178 யூனிட்கள் மட்டுமே நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த கிளாசிக் 350 கடந்த மாதத்தில் 719 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் புதிய தலைமுறை மாடலை முக்கிய காரணமாக சொல்லலாம்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
350cc Motorcycle Sales Aug 2021 – Royal Enfield Continues To Lead.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X