ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

ஆக்சிஜன் விநியோகத்திற்காக பிரபல நடிகர் ஒருவர் அவரது விலையுயர்ந்த பைக்கை விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல்கல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

பாலிவுட் மற்றும் டோலிவுட் என இரு திரையுலகிலும் பங்காற்றி வருபவர் ஹர்ஷ்வர்தன் ரானே. இவரே தனது விலையுயர்ந்த பைக்கை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று பல மடங்கு உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அலை மோத தொடங்கியுள்ளனர். நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிக்கூட இல்லாத அவல நிலை காட்சியளிக்கின்றது. மேலும், தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் தொற்று காரணமாக மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் ஆக்சிஜன் விநியோகம் தட்டுப்பாடின்றி செய்யப்பட வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கையில் அரசுகளுடன் இணைந்து சில தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க தொடங்கியுள்ளது.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் வழங்கல் பணியில் அவை ஈடுபட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது பங்களிப்பை வழங்கும் வகையில் பிரபல நடிகர் ஹர்ஷ்வர்தன் தனது பைக்கை விற்று மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியிருக்கின்றார்.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

அவற்றை கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைக்காக போராடி வரும் நோயாளிக்களுக்காக வழங்கியிருக்கின்றார். இதுகுறித்து அவர் அவரது இன்ஸ்டா பதிவில், "ஆக்சிஜனுக்காக எனது பைக்கை விற்றதில் முதல் மூன்ரு சிலிண்டர் தற்போது வந்திருக்கின்றன. மிக விரைவில் இன்னும் சில எதிர்பார்க்கப்படுகின்றது" என்றார்.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக, ஹர்ஷ்வர்தன், தனது ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 535 பைக்கையே விற்றிருக்கின்றார். இது 2018ம் ஆண்டு வரை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்தது. தற்போது இப்பைக் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. இதற்கு பதிலாக 650 ட்வின் பைக்குகளை நிறுவனம் விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

சரி வாங்க நடிகர் ஹர்ஷ்வர்தன் விற்பனைச் செய்திருக்கும் பைக் பற்றியும் கொஞ்சம் பாத்துடலாம். இப்பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் 535சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினையே பயன்படுத்தியுள்ளது. இது ஓர் ப்யூவல் இன்ஜெக்டட் வசதிக் கொண்டதும்கூட. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 29 பிஎச்பி மற்றும் 44 என்எம் டார்க்கை வெளியற்றக் கூடியது. இது 5 ஸ்பீடு கியர்பாக்கிஸ் இயங்கும்.

ஆக்சிஜன் விநியோகத்திற்காக தனது விலையுயர்ந்த பைக்கை விற்கும் பிரபல நடிகர்... யார் அவர்னு தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பதிய தயாரிப்புகளுக்கு வழிவிடுதல் போன்ற முக்கிய காரணங்களுக்காக இந்த இருசக்கர வாகனம் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது. இதன் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ராயல் என்பீல்டு 650 இரட்டையர்கள் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Harshvardhan Sells His Royal Enfield To Raise Funds For Oxygen Concentrators. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X