மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் உலகளாவிய மோட்டார்சைக்கிள் விற்பனையில் சிறிய தடுமாற்றத்தை கண்டது உண்மையே. ஆனால் இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்ட் அதனை சரிசெய்ய பலக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

இந்தியாவில் தொழிற்சாலையை மூடியது, ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்ந்தது எல்லாம் அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியே. குறிப்பாக தாயகமான அமெரிக்காவில் விற்பனையை அதிகரிப்பது எவ்வாறு என்பதில் தான் இந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் தீவிரமாக யோசித்து, அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தி வருகின்றனர்.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

அதற்கு கை மேல் பலனாக, ஹார்லி-டேவிட்சன் பிராண்டில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பான் அமெரிக்கா மோட்டார்சைக்கிளுக்கு ஏகோபித்த வரவேற்பு அமெரிக்காவில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. பான் அமெரிக்கா 1250 இந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

மிக பெரிய என்ஜினை கொண்ட அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான இது இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்பின் டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது. பான் அமெரிக்கா பைக்கின் விலை யுஎஸ்-இல் 17,000 டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.12 லட்சமாகும்.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

1250சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கு இந்த விலை மலிவானதாகவே அமெரிக்கர்களால் பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் பான் அமெரிக்கா பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுவிடும் என அங்கிருக்கும் மீடியாக்கள் தெரிவித்தன.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

ஆனால் தற்போது வரையில் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இன்னும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காத்து கொண்டு தான் இருக்கின்றனர். டீலர்ஷிப் மையங்கள் ஒன்றொன்றாக இந்த அட்வென்ச்சர் பைக்கை டெலிவிரி செய்யும் பணிகளை துவங்கி வருகின்றன.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

பான் அமெரிக்கா மாடலை 1250 ஸ்டாண்டர்ட் & 1250 ஸ்பெஷல் என்ற இரு விதமான வேரியண்ட்களில் ஹார்லி-டேவிட்சன் விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 1,252சிசி, ரெவோல்யூஷன் மேக்ஸ் 1250 லிக்யுடு-கூல்டு, வி-ட்வின் தான் வழங்கப்படுகிறது.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் இருந்து வேறுப்படுவதற்காக ஸ்பெஷல் வேரியண்ட்டில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

இதில் அடாப்டிவ் ரைடு உயர வசதி, வாகன லோடு கண்ட்ரோல் உடன் துணை-ஆக்டிவ் சஸ்பென்ஷன், ஹீட்டட் ஹேண்டில்பார் கைப்பிடிகள், ஸ்டேரிங் டேம்பர், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க ப்ரேக் பெடல், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மலிவான ஹார்லி-டேவிட்சன் அட்வென்ச்சர் பைக்கிற்கு அமெரிக்காவில் ‘செம்ம’ ரெஸ்பான்ஸ்!! இந்தியாவிற்கும் வருகிறது...

ஸ்டாண்டர்ட் பான் அமெரிக்கா மாடலில் மழை, ஸ்போர்ட், சாலை, ஆஃப்-ரோடு, ஆஃப்-ரோடு+ மற்றம் கஸ்டம் மோட் என ஐந்து விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. அதுவே ஸ்பெஷல் வேரியண்ட்டில் கூடுதலாக இரு கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளக்கூடிய மோட்கள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Affordable Harley-Davidson Pan America super hit in USA.
Story first published: Thursday, June 3, 2021, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X