விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!

என்ஐஜே நிறுவனத்தின் விலைக் குறைந்த மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த புதுமுக மின் வாகனங்கள் பற்றியும், அதன் விலை பற்றிய தகவலையும் கீழே காணலாம்.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்ஐஜே ஆட்டோமோட்டிவ் (NIJ Automotive). இது ஓர் மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனமே, க்யூவி60 (QV60), அக்சலரியோ (Accelero) மற்றும் ஃபிலியன் (Flion) ஆகிய மூன்று விதமான மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

இந்த வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் அதிக பயன்பாட்டையும், சேமிப்பையும் வழங்கும் என நிறுவனம் உறுதியளித்திருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் இந்த மின்சார வாகனங்களின் மூலம் 25 மடங்கு அதிக பலனைப் பெற முடியும் என கூறப்படுகின்றது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

இதனை சர்வீஸ் செய்வது, பராமரிப்பது மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு மிகக் குறைந்தளவு செலவீணம் ஏற்படும் என்றும், எனவேதான் இத்தகைய பெரும் பங்கு சேமிப்பை நம்மால் பெற முடியும் என நிறுவனம் உறுதியாக கூறுகின்றது. தொடர்ந்து, உலகத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் இந்த வாகனங்கள் பேருதவியாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

என்ஐஜே க்யூவி60

என்ஜஜே நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 51,999 என்ற குறைந்த விலையை நிர்ணயித்திருக்கின்றது. இது இலகுரக எடையுள்ள மின்சார ஸ்கூட்டராகும். இருப்பினும், இந்த வாகனத்தின் உறுதியாக உடலமைப்பிற்காக ஸ்டீல் பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

இதுதவிர, ஸ்கூட்டரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி வண்ண திரை, கீலெஸ் என்ட்ரீ, ட்யூப் லெஸ் டயர் மற்றும் என் ஸ்கூட்டரை கண்டுபிடி எனப்படக் கூடிய திருட்டு ஒழிப்பு தொழில்நுட்பம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், திருட்டு தவிர்ப்பு அலாரம் வசதியும் இந்த வாகனத்தில் வழஹ்கப்பட்டிருக்கின்றது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

மின்சார ஸ்கூட்டரில் 60V VRLA பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியே உயர் டார்க் திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரங்கள் தேவைப்படும். 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதே ஸ்கூட்டரை சுமார் 75 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரக் கூடிய வெவ்வேறு தேர்வுகளாகவும் நிறுவனம் வழங்க இருக்கின்றது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

என்ஐஜே ஃபிளியோன்

இந்த மின்சார ஸ்கூட்டருக்கு தயாரிப்பு நிறுவனம் ரூ. 47,000 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இதில் ஜிபிஎஸ், திருட்டு தவிர்ப்பு அலாரம் வசதி, ஐஓடி தொழில்நுட்பம், ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

தொடர்ந்து மூன்று விதமான ரைடிங் மோட்கள், நீளமான வீல் பேஸ், மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய திறன் என கூடுதல் சிறப்பம்சங்கள் சிலவற்றையும் நிறுவனம் இந்த வாகனத்தில் வழங்கியிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 முதல் 8 மணி நேரம் தேவைப்படுகின்றது. அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் இந்த வாகனத்தைக் கொண்டு சுமார் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது இருவிதமான ரேஞ்ஜ் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

என்ஐஜே ஆக்சலரியோ

என்ஐஜே அறிமுகப்படுத்தியிருக்கும் மின்சார ஸ்கூட்டர்களிலேயே மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். இதற்கு ரூ. 45 ஆயிரம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. விலை குறைவானதாக இருந்தாலும் இந்த ஸ்கூட்டரில் தொழில்நுட்ப அம்சங்கள் குறைவில்லை. மேலே பார்த்த இரு மின்சார ஸ்கூட்டர்களுக்கு இணையான வசதி மற்றும் தொழில்நுட்ப கருவிகளை இதுவும் தாங்கியிருக்கின்றது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், என் ஸ்கூட்டரை கண்டுபிடி, ரிமோட் அக்சஸ், திருட்டு தவிர்ப்பு அலாரம் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், சிறந்த பாதுகாப்பான பயணத்திற்காக 130மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன்பக்க வீலிலும், 110 மிமீ அளவுள்ள டிரம் பிரேக் பின்பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

இந்த மின்சார ஸ்கூட்டரில் அதிக ரேஞ்ஜை வழங்கும் விதமாக 60வோல்ட் 27ஏஎச் திறன் கொண்ட லீட் ஆசிட் பேட்டரி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதனை முழுமையாக சார்ஜ் செய்து ஈகோ மோட் எனப்படும் குறைந்த வேக மோடில் இயக்கினால் சுமார் 90 கிமீ வரை ரேஞ்ஜை பெற முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!!

இதற்கேற்ப அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்த ஸ்கூட்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறைந்த விலையில் இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களை இந்த மூன்று வாகனங்களும் பெற்றிருப்பது இந்திய மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Agra Based NIJ Automotive Launches QV60, Accelero, Flion 3 New e-Scooters In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X