பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

ஆம்பியர் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை தடாலடியாக குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்த வரிசையில், ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை 9 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

ஆம்பியர் நிறுவனத்தின் முதன்மையான மாடலான மேக்னஸ் ப்ரோ தற்போது 65,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது பெங்களூர் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆம்பியர் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாடல் வாரியான விலை விபரத்தை நீங்கள் கீழே உள்ள பட்டியலில் காணலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை பெங்களூர் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Model FAME II Subsidy Revised Price Old Price
Zeal ₹59,990 ₹68,990
Magnus Pro ₹65,990 ₹74,990
பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 60V 30Ah லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும், 1.2kW எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இந்த ரேஞ்ச் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

அதே நேரத்தில் லோ மற்றும் ஹை என மொத்தம் இரண்டு ரைடிங் மோடுகள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. லோ மோடில் இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 35 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் ஹை மோடில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும்.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானிய தொகையை ஒன்றிய அரசு சமீபத்தில் உயர்த்தியது. ஃபேம் இந்தியா-2 திட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்படுத்தப்படும் பேட்டரி தொகுப்பை பொறுத்து மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு kWh-க்கு 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

ஒன்றிய அரசு தற்போது அதனை ஒரு kWh-க்கு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதாவது மானிய தொகை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளின் விலையை குறைத்து வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அத்துடன் டீசல் விலையும் 100 ரூபாயை கடந்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பலர் திட்டமிட்டுள்ளனர்.

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விலை தடாலடியாக குறைந்தது! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ருவீங்க

இந்த நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. விலை குறைந்துள்ளதால், வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் முன்வருவார்கள். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உயர்ந்து, இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவை குறையும் என்பதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

Most Read Articles
English summary
Ampere Electric Scooters Prices Drop By Rs 9,000 After FAME India-2 Subsidy Revision. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X